மனதின் எண்ணம்
உண்ணுவதற்கு இவ்வுலக மண்ணினை
உணவாக மனிதன் மாற்றினான் என்றால்
கல்லினை கடல் மணலினை கடும் பாறையை
கணக்காக கூறிட்டு காசிற்கு விற்றிடுவான்
உயிரின் கூறதனை உண்மையில் மனிதன் கண்டால்
ஒருவகை குடுவைச் செய்து உயிரை அதிலடைத்து
ஊரு தோறும் எங்கும் கூவியே விற்று வந்து
ஒவ்வொகு நாளும் அவனே பெரும் பொருளீட்டுவான்
மனதின் எண்ணம் அதனை மானிடன் கண்டானாகின்
மகிழ்வுடன் அவரோடு பேசி மாயங்கள் செய்வதாய் கூறி
மடைத் திறந்த வெள்ளம் போலே மந்திரவார்த்தையாலே
மயங்குவோரிடம் பணத்தைக் கறந்து மகத்துவமடைவான்
மானிட பிறப்பு பெருமை மதியும் அறிவும் சிறப்பு
அவனுடைய செயலும் எண்ணமும் நனி கீழ்மையே
எச்செயலிலும் ஆதயம் தேடும் கீலக புத்தி அதிகம்
என்றாலும் மனிதன் என்ற உயர்திணையில் உள்ளானே.
------ நன்னாடன்.