பாக்யாத லஷ்மி பாரம்மா புரந்தர தாசர் பாடல் தமிழ் வடிவில்
பாக்யாத லஷ்மி பாரம்மா.... (புரந்தர தாசர் பாடல் தமிழ் வடிவில்
பாக்யத்தைத் தரும் லஷ்மி வாம்மா -
சௌ பாக்யத்தைத் தரும் லஷ்மி வாம்மா
என் அம்மா… சகல
சௌ பாக்யத்தைத் தரும் லஷ்மி வாம்மா
சதங்கை அணிந்த கால்களில் சப்தம்
செய்தவாறு அடிமேல் அடியினை வைத்து
நன்கு படித்தவர்கள் பூஜிக்கும் வேளையில்
தயிரினில் வந்திடும் வெண்ணெயைப் போலே (பாக்யத்தைத்)
தங்க மழையினைப் பெய்தவாறு வந்தே
எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிடுவாய்
கோடிக் கதிரவனின் ஒளியினைக் கொண்ட
ஜனகனின் மகளே சீதையே விரைவில் (பாக்யத்தைத்)
எங்கும் செல்லாமல் உன் அன்பர் இல் வந்தால்
எப்போதும் திருவிழா என்றென்றும் மகிழ்ச்சி
உண்மையை இயம்பும் அன்பர்கள் மனதில்
என்றும் நிலைபெறும் லட்சுமித் தாயே (பாக்யத்தைத்)
கணக்கற்ற நன்மையைத் தந்திட நாளும்
பல்வளைப் பூண்ட உன் வலக்கரம் காட்டி
திலகணிநெற்றித் தாமரை விழிகள் கொண்ட
வேங்கட ரமணனின் பட்டத்துத் ராணியே (பாக்யத்தைத்)
சர்க்கரையும். நெய்யும் மழையாய்ப் பொழிந்திட
வெள்ளிக் கிழமை பூஜைவேளையில்..
கருணை வடிவான ரங்கநாதனின்
புரந்தர விட்டலனின் ராணியே அம்மா..(பாக்யத்தைத்)
குறிப்பு
முக நூலில் வந்தது இசைக்கேற்ப மாற்றியமைத்தது .
அன்புடன்
ஸ்ரீ விஜயலக்ஷ்மி