அக்னி பறவை
அக்னி பறவை நான்...!
எத்தனை முறை...
இறகுகள் கருகினும்,
மீண்டு வருவேன்...
சாம்பலிலிருந்தது...
கண்களிலே...
நம்பிக்கையை தேக்கிவைத்து...
எனக்கான பெருமழையை,
எதிர்நோக்கி...
காத்திருககிறேன்...
நாவரண்டாலும்,
மழைநீர் மட்டுமே அருந்தும்...
சக்கரவாகமாய்...
சிறு மழையோ..! பெரும் புயலோ..!
இரண்டும் சம்மதம்தான்..
தெரியவில்லை...!
காலம்...
எனக்கான வரத்தில்...
என்ன வைத்து
காத்திருக்கிற தென்று...!
...