தன்னம்பிக்கை

நான் கண்ட லட்சிய கனவு
இப்போது நித்திரையில் தூங்குதடா!
நித்திரையில் தூங்கினாலும்
உன் நினைவு நித்தம் நித்தம் தோன்றுதடா !
திடீரென்று சிறுதுளியும் தன்னம்பிக்கை
மழைத்துளியாய் மாறி
துவண்டு போன என் மனதை
துளிர்விட்டு மரமாக்குதடா !
முயற்சியின் நோக்கம்
முன்னேற்றம் தானடா !
என்றும் உன்னுடன் தன்னம்பிக்கை
தோழனாக நானடா !

எழுதியவர் : பூமணி (1-Jun-20, 7:52 am)
சேர்த்தது : பூமணி
Tanglish : thannambikkai
பார்வை : 215

மேலே