தனிமையில் உன்னை அறிந்து கொள்

தனிமை தரும் இனிமை
உன்னை அறிந்து கொள்ள அது ஒரு புதுமை :
வலைத்தளம் தேவையில்லை தனிமைக்கு
உன் வாழ்க்கையின் வலைத்தளத்தை
உன்னுக்குள் தேட வைக்கும் தனிமை
இத்தனை நாள் பிறரை பற்றிய கவலை.....
இன்று முதல் உன் கவலையை போக்க வழி சொல்லும் தனிமை :
இயந்திரம் போல் உழைக்கும் உனக்கு
இளைப்பாற மரத்தடி நிழலில் தனிமை :
இளம் தென்றல் காற்று உன் காதோடு உரச
உன்னை கவித்தொடுக்க தூண்டிடும் தனிமை :
மனஅழுத்தத்தை குறைக்கும் தனிமை :
உன்னுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் தனிமை :
இனம் புரியாத மகிழ்ச்சியை உண்டாகும் தனிமை :
விடைத் தெரியா கேள்விக்கும் பதில் சொல்லும் தனிமை :
வீழ்ச்சியை வெற்றியாக மாற்ற உதவும் தனிமை :
முதலில் உன்னை அறிய வைத்திடும் தனிமை :
உன்னை முழுமையாக அறிந்துகொள் !
அது உன் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றும் :
தனிமையில் அச்சம் எதற்கு
உன்னை பற்றி உனக்கே தெரிவிக்கும் ஆசானிடத்தில் !.....

எழுதியவர் : பூமணி (23-May-20, 10:30 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 1278

மேலே