மடியில் விழுந்தது ஒரு மலர் மௌனமாய்
மடியில் விழுந்தது ஒரு மலர்
மௌனமாய் ....
மரத்தின் உயரத்தில்
கிளைகளின் இலைககளின்
உறவுகளுடன் மலர்ந்த மலர்
மரநிழலில் அமர்ந்திருந்த
அவள் அழகினை ரசித்து
பாராட்டிட உறவுகளுக்கு விடைகொடுத்து
அவள் மடியில் மௌனமாய் விழுந்து சிரித்தது !

