தந்தைக்கோர் தினம்

உலகத்தின் முதல் வழிகாட்டி -
விரல் நுனியில் வீரம் கற்றுக்கொடுத்தவர்
தவழ்ந்து பழகிய பாதங்களை
ஊன்றி நடக்க வைத்த உத்தமர் ................

கடவுளையே காட்டிய கடவுள்
உலகத்தின் எல்லா துன்பங்களையும்
இதையத்துக்குள் புதைக்க தெரிந்த புனிதர் ...........

வாழ்க்கை முழுதும் வறுமை இருந்தாலும்
தன் வாரிசுக்கு வளத்தை தேடும் தலைவன்
காலத்திற்கும் ஓடாய் தேய்ந்து
கவலை போக்கும் தலைவன் .................

தந்தையர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : விநாயகமுருகன் (21-Jun-20, 10:07 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 98

மேலே