புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 4---
புத்தன் வீட்டுப் பூக்கள் - 4
31. உனக்கு நீதான் முதல் எதிரி
உனக்கு நீதான் முதல் நண்பன்.
32. உயிருக்காகப் போராடும் மனிதர்களை விட
உரிமைக்காகப் போராடும் மனிதர்களே அதிகம்.
33. தன்னலம் இருக்கும் வரை தலைவனாய் மாறும் தகுதி உனக்குக் கிடையாது.
34. தன்னைத் திட்டினால் பொறுத்துக் கொள்ளும் மனம்
தன்னைச் சார்ந்தவர்களைத் திட்டினால் பொறுத்துக் கொள்ளாது.
35. உன்னை விட பெரிய எதிரி உலகிலேயே கிடையாது.
36. மக்களை வாக்குகளாய் நினைப்பவன்
அவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவே மாட்டான்.
37. உள்ளங்கள் இணையாத வரை
ஒவ்வொரு உறவிலும்
ஒரு விரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
38. மரணம் வரும் போது தான் பலருக்கும் மனிதம் என்ற கதவு திறக்கிறது.
39. பழகாத இடத்தில் பயந்து நடப்பதை விட
பத்திரமாக நடப்பதே பாதுகாப்பு.
40. வளங்களை அழித்து வளர்ச்சியைக் கட்டமைத்தால்
வாழ்க்கைக்கு அதிகம் துன்பத்தையே தரும்.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..