நகைச்சுவை துணுக்குகள் 11

சட்டம்னா சட்டம்தான்
நீங்க போன வருஷம் உயிரோடு இருந்ததற்கான சான்றிதழை கொடுக்கத் தவறிட்டீங்க. நாங்களும் அதைக் கவனிக்காம உங்களுக்கு பென்ஷன் கொடுத்துட்டோம்.

சார், ஆனால் இந்த வருஷம் நான் உயிரோடே இருப்பதற்கான சான்றிதழை கொடுக்க நேராவே வந்திருக்கேனே சார்.

அதையெல்லாம் நீங்க போன வருஷம் உயிரோடு இருந்திருக்கீங்கறதுக்கு சாட்சியமா ஏத்துக்க முடியாது. சட்டம்னா சட்டம்தான்.அதுக்கான போன வருஷ சாட்சியத்தைத் தந்தாலொழிய உங்களுக்கு இந்த வருஷம் பென்ஷன் தர முடியாது.
********************
அப்பா: டேய் நீ உன்னோடே ஃபோர்ஃபாதர்ஸைப் பத்தி முதல்லே தெரிஞ்சிக்கணும்.

மகன்: நீங்க ஒரு ஃபாதர் மட்டும்தான் எனக்குத் தெரியும். மிச்சம் மூணு ஃபாதர்ஸைப் பத்தி அம்மா இதுவரையிலும் எதுவுமே எங்கிட்டே சொல்லவே இல்லையே அப்பா.

அம்மா: இதுக்குத்தான் உங்க கிட்டே சொல்றது, தத்துப்பித்துன்னு எதையாவது அவன்கிட்டே உளறி வெக்காதீங்கன்னு. ஃபோர்ஃபாதர்ஸ் என்ன ஃபோர்ஃபாதர்ஸ்? நம்ம முன்னோர்களைப் பத்தின்னு அவன்கிட்டே சொல்லி இருக்கலாமில்லே.
***************
சார், ஒரு அப்பாவியைப் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க. வாங்க போய்க் காப்பாத்துவோம்.

நான் அதை வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன் இல்லே. இப்பப் போய் நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணுறீங்களே. அறிவு இருக்கா உங்களுக்கு? வேறே பத்திரிகைகள்லே வரதுக்கு முன்னாடி நான் இதை எங்க பத்திரிகைக்கு அனுப்பிச்சாகணும். அப்பதான் அது ஸ்கூப் நியூஸ் ஆகும்.
***************

அம்மாள்: எங்க பெண்ணுக்கு வரன் பார்க்கணும்.

புரோக்கர்: அப்படியா? அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன். அவனுடைய அப்பா அம்மா எல்லாம் நம்ம ஊரிலே இருந்து போனவங்க தான்.

அம்மாள்: : ஓ! அந்தப் பையனையே முடிச்சிடலாம்.

புரோக்கர்: அந்தப் பையனோட தங்கை ஒண்ணு இருக்கு, அங்கேயே பிறந்து வளர்ந்தது. அதை உங்க பையனுக்கு.....

அம்மாள்: ஊஹூம். அது வேணாம். அது நமக்கு சரிப்பட்டு வராது.
****************
அமெரிக்காவுலே நம்ம ஊர் மாதிரி ரோடுலே எல்லாம் குப்பை போட முடியாது.

ஒரு குப்பை கூட ரோடுலே போடக்கூடாதுங்கிற ஊர்லே போய் நம்மாலே குப்பை கொட்ட முடியாதுங்க.
********************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (23-Jun-20, 3:14 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 89

மேலே