நகைச்சுவை துணுக்குகள்12

நம்ம நாட்டு விளையாட்டு வீரர்கள் எல்லாம் தங்கம் வெல்றதை விட்டுட்டு வெறும் வெண்கலம்தான் 'ஜெயிக்கிறாங்கங்கறதை நினைச்சா மனசுக்குக் கஷ்டமா இருக்கு.

நீங்க வேறே. தங்கத்து மேலே ஆசை வெக்காதீங்கன்னு நம்ம நாட்டிலே மகான்களிலே இருந்து அரசியல்வாதிகள் வரையிலே எல்லாரும் சொல்றதை நம்ம விளையாட்டு வீரர்கள் அப்படியே கடைப்பிடிக்கிறாங்க. இதுக்காக சந்தோஷப் படறதை விட்டுட்டு வருத்தப் படுவாங்களா யாராவது?
***********

யானை உங்களோடதா? அது செத்ததுக்கா இப்படி அழறீங்க?

இல்லை. அதைப் புதைக்கறதுக்கான குழி வெட்டற வேலையை எங்கிட்டே கொடுத்து இருக்காங்க.
*************
இவளை அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுப் போனதே தப்பாப் போச்சு. இப்ப எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தான் என் வொய்ஃப் சமைக்கிறா. ஏன்னு கேட்டா அமெரிக்காவுலே எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தானே சமைக்கிறாங்கன்னு சொல்றா.
********************

நான் இந்த கடிதத்தை ரொம்பவும் மெதுவாகவே எழுதுகிறேன். ஏன்னா இப்பத்தான் நீ எழுத்தெல்லாம் ஒவ்வொண்ணா கூட்டித் தமிழ் படிக்க ஆரம்பிச்சிருக்கே. உன்னாலே வேகமாப் படிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.
********

எழுதியவர் : ரா. குருசுவாமி( ராகு) (25-Jun-20, 2:31 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 58

மேலே