நிலவின் நினைவுகள்
விடுமுறையின் நாட்களில்...
ஊருக்கு வரும் போதெல்லாம்...
உடன் வந்து-
ஒட்டிக் கொள்ளும்...
உன் ஞாபகங்கள்.!!
எதிர்ப்படும்-
ஏதாவது ஒன்றிலாவது...
எச்சங்களின் மிச்சமாக...
எஞ்சி நிற்குமுன்
நினைவுகள்.!!
ஆல மரத்தடி...
ஆற்று மணல்வெளி...
பிள்ளையார் கோவில்...
பேருந்து நிலையம்...
பாவை விளக்கு, பார்த்திபன் கனவு என
சேர்ந்து ரசித்து இருவருமாய்...
படித்த நூலகமும்...
மூலை வீட்டுக் கிணற்றடி...
முச்சந்தி சுமை தாங்கி...
என...
ஏதாவது ஒன்றில்
எஞ்சியிருக்கும் - உன் நினைவுகள்...
அருவமாய் தெரியும்
அருகில் வராமல்..
எதையும் பாராமல்
கை பேசி பார்த்து...
கடந்து நான் போனாலும்..
பாதை எங்கும் ஒலிக்கும்
பள்ளிக்கூட மணியோசை வந்து
பாதையை மறித்து...
எட்டி பார்க்கச் சொல்லும்...
நீயும் நானும் படித்த...
நம் வகுப்பறையை..!!
//-//--//-//

