உன் முத்தமெனும் ஆயுதத்தால் தீண்டி செல்லடி 555
காத்திருப்பு...
கோடி வின்மீன்கள்
விண்ணில் ஜொலித்தாலும்...
ஒற்றை நிலவு
மட்டும் பிரகாசமாய்...
கோடி மலர்கள் மண்ணில்
மலர்ந்தாலும்...
முட்கள் நிறைந்த ரோஜாதான்
பலருக்கு பிடிக்கிறது...
லட்சம் பெண்களை
நான் கடந்திருந்தாலும்...
நீ
ஒருத்தி மட்டும்தான்...
என் நெஞ்சில்
முள்ளாய் குத்தினாய்...
அமாவாசைக்கு காத்திருக்கும்
நிலவை போல...
உனக்காக ஒற்றை மரத்தடியில்
காத்திருக்கிறேன் பித்தனாக...
உன் வரவை
எதிர் நோக்கி நான்...
உன் முத்தமெனும்
ஆயுதத்தால்...
என் இதயத்தில்
தடம் பதித்து செல்லடி.....