பெண் விடுதலை

சுஜாதா, அந்த கட்டுரையை முடிச்சிட்டியா? என்று கேட்டவாறே உள்ளே வந்தார் இராசேந்திரன், இராசேந்திரன் ஒரு சிறிய வாராந்திர பத்திரிக்கை நடத்துபவர். முக்காவாசி முடிச்சிட்டேன் எடிட்டர் என்று சொல்லிக்கொண்டே இராசேந்திரன் அறைக்குள் நுழைந்தாள். என்ன எடிட்டர் இன்னைக்கு உங்க மூஞ்சி ரொம்ப சோகமா இருக்கு, மேடம் காலையிலே பாடம் எடுத்தாங்களா? என்று கிண்டலாக கேட்டாள். சுஜாதா அந்த பத்திரிக்கையில் வேலை செய்பவள் தான் ஆனால் இராசேந்திரனுக்கு தங்கை போல, மேலும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவள், இவளின் சம்பளத்தில் தான் குடும்பம் ஓடுகிறது.

ஒரு கட்டுரையை முடிக்க பத்து நாள் வேணுமா? கட்டுரையை முடிக்காம இப்படி வாய் பேசிட்டு இருக்கே. உனக்கு புடிச்ச தலைப்புல தான் கட்டுரை எழுதுற, வர பெரியார் வார சிறப்பு பதிப்புக்கு இந்த தலைப்பு ரொம்ப முக்கியம், எனக்கு இந்த கட்டுரை இன்னைக்கு அஞ்சு மணிக்கெல்லாம் வேணும், சொல்லிட்டேன். சரி சரி இன்னைக்கு மூணு மணிக்கு வந்துரும், பைனல் டச் மட்டும் தான். நீங்க படிச்சுட்டு பைனல் பண்ணிட்டா, பிரின்டிங் செக்ஷன் கு .அனுப்பிடுவேன் என்ற சுஜாதாவை முறைத்தார் இராசேந்திரன். வர வர உன் தொல்லை தாங்க முடியல. உங்க அம்மாகிட்ட பேசணும் உனக்கு ஒரு கால் கட்டு போடணும்.

இப்ப தான் பெரியார் பிறந்தநாளுக்கு சிறப்பு பதிப்பு போடணும் சொல்லிட்டு அவரோட கனவை அழிக்க பாக்கிறிங்க. பெண் விடுதலைனு கட்டுரை போட்டா மட்டும் உங்க பத்திரிக்கை பெரியார் கொள்கைகளை பின் படுத்தற மாதிரி இல்ல, நிஜத்திலும் பண்ணனும். கல்யாணம் எப்போ பண்ணனும் யாரை பண்ணனும் நான் தான் முடிவு எடுப்பேன். உண்மை சொல்லபோன நானும் பெரியாரின் பேத்தி தான். சரி விசயத்துக்கு வரேன், எங்க அம்மாகிட்ட பேசும்போது சொல்லுங்க, நான் ஒருத்தனை சிபாரிசு பணறேன் அவனை பத்தியும் சொல்லுங்க.

மூன்று வருடங்கள் கழித்து .....


இராசேந்திரன் சுஜாதாவை பார்த்து கவலை படாதே உன் வாழ்க்கையில இதெல்லாம் நடக்கும்னு நினைச்சு கூட பாக்கல, சரி நீதானே அவனை கல்யாணம் பண்ணிப்பேன் சொன்னே, இப்போ இப்போ வருத்தப்பட்ட, என்ன அர்த்தம் எல்லாம் சரியாகிடும் நான் பேசுறேன் அவன்கிட்ட நீ உன் வேலைய பாரு இந்தவாரம் மகளிர் தின சிறப்பு இதழ் நியாபகம் இருக்குல்ல, பிரின்டிங் கோவிந்தன் கிட்ட சொல்லிடு, நியாபகம் இல்லாம சொதப்பி வெக்க போறான். கிட்ட இருந்து பாத்துக்கோ. இல்ல எடிட்டர் நீங்க அவன்கிட்ட பேசவேணாம், அப்புறம் உங்ககூட சேர்த்துவெச்சு பேசப்போறன். யாரோ ஒருத்தர் சொன்னாங்க நானும் பெரியார் பேத்தின்னு, உண்மையான பெரியார் பேத்தி எதையும் தைரியமா எதிர்கொள்வாள். அப்போ நீயே பேசு என்று ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்தார் இராசேந்திரன்.

அதானே, உண்மையான பெண் விடுதலை அந்தந்த பெண்கள் மனம் வைத்தால் மட்டுமே சாத்தியம், ஆண்கள் என்னதான் துணையாக இருந்தாலும் கூண்டுக்குள் இருக்கும் கிளி வெளிய அதன் சிறகை விரித்தாள் மட்டுமே சாத்தியம். பெண் விடுதலை என்பது பெண் எடுக்கும் தைரியமான முடிவில் மட்டுமே இருக்கும் என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டே, தன் கைபேசி எடுத்து இராஜேஷ் - ஐ அழைத்தாள்.

எழுதியவர் : இராசுஜி (29-Jun-20, 10:33 pm)
சேர்த்தது : RK
Tanglish : pen viduthalai
பார்வை : 391

மேலே