மொத்தின் - குறுங்கதை
ஏன்டா சின்னத்தம்பி, அண்ணன் பையனுக்கு அவுரு 'நித்தின்' (Nitin)னு பேரு வச்சிட்டாரு. எம் பையன் பேரு 'மித்துன்'. உன் மனைவியை மகப்பேறு மருத்துவமனையில சேத்திருக்கறாங்க உங்க மாமியார் வீட்டார்.
@@@@@
ஆமாம் அண்ணா. இன்னும் ரடண்டு நாள்ல கொழந்தை பொந்திரும்னு சொன்னாங்க..
@@@@@
சரி. உன் மனைவிக்கும் ஆண் பிள்ளையாப் பொறந்தா என்ன பேரை வைக்கிறதா முடிவு பண்ணிருக்கிறீங்க?
@@@@@@
இதென்ன நடண்ணா கேள்வி? பெரிய அண்ணன் பையன் பேரு நித்தின். உங்க பையன் பேரு 'மித்துன்' எம் பையன் 'நித்தின்', 'மித்தின்'னுக்குப் பொருத்தமா வச்சத்தானே சரியா இருக்கும்?
@@@@@@
நீ சொல்லறது சரிதான்டா சின்னத்தம்பி.
#@@@@@
சரி என்னோட ரண்டு அண்ணன்மார்களும் பையன்களுக்கு இந்திப் பேருங்கள வச்சிருக்கிறீங்க. அந்தப் பேருங்களுக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@@
என்னடா சின்னத்தம்பி சொல்லற?
பிள்ளைங்க பேரு தமிழ்ப் பேரா இருக்கக்கூடாது. கடைச்சங்க காலத்தில இருந்தே நம்ம தமிழ் மன்னர்களின் பேராதரவில் வடமொழிப் பேரை வைக்கிறதுதானே நம்ம தமிழர்களின் நாகரிகம்.
@@@@@@@
ஆமாம் நடண்ணா. எம் பையனுக்கு வைக்கப் போற பேரைச் சொல்லட்டுமா?
@@@@@@
சொல்லுடா சின்னத்தம்பி.
@@#####
'மொத்தின்'.
@@@@@#
அருமைடா. அருமைடா சின்னத்தம்பி. 'நித்தின்', 'மித்துன்', 'மொத்தின்'. பொருத்தமான பேருங்கடா. நம்ம பையன்கள் மூணு பேரும் நெறைய பிள்ளைங்களப் பெத்து அவுங்களுக்கு இந்தி வடமொழிப் பேருங்கள வச்சு நம்மள மாதிரியே தமிழர் பாரம்பரியத்தைக் காப்பாத்துவாங்கடா.
■■■■■■■■■■■■■■■■■■■■
Nitin = master of right path.
Mithun = union, couple
Mothin = meaningless name.
◆◆◆◆◆◆◆◆●◆◆●◆●●●●●●●
பிறமொழிப் பெயராசை தமிழரின் தன்மான இழப்பின் அடையாளம்..