எல்லைப்போர் வீரனின் உள்ளப்போர்

எத்தனை பேருக்குத்தெரியும்-ஓர்
எல்லைப்பாதுகாப்பு வீரனின் இதயப்போர்...!
தான் தந்தையாகப்போகும் செய்தி கூட-
தகவலாய் தபாலில் தான் வரும்.....,
அந்த நொடி..,
இருதய ஓசையெல்லாம்..-இன்பத்தில்
இருவிழிகளில் இறங்கும் நீராய்...!
ஊடல் புரிந்த நிமிடங்கள்-மனதில்
உதிர்ந்து எழுந்து வரும்...!
உள்ளப்பூரிப்பால் ஒருலட்சம் பூமரங்கள் எண்ணத்தில் மலரும்....!
கட்டியவளைக் காணும் எண்ணம்-
கனம் ஒவ்வொன்றையும் யுகமாக்கும்....!
தலையணைக்குள் முகம் புதைத்து-தன் காதல் புதையலைத்தேடுவான்...!
காலங்கள் வாசிக்கா மொழிகளை-அவன் கண்ணீர் எழுதும்...!ஓருயிராய் வந்து தன்னில் கலந்து..
ஈருயிராய் மாறிய தன்னுயிரை....,
நித்தம் நினைத்து....
நினைவில் திளைத்து....
தானும் சுமப்பான் நினைவுகளால்....!
தங்கத்தை வயிற்றில் சுமக்கும்..
மங்கையைக்கான...
தவியாய்த்தவித்திடுவான்....!
தன் ஆண்மையின்அர்த்தத்திற்கு...
தன்னை தாரை வார்த்த...
பெண்மையின் அர்த்தம் புரியும் அவனுக்கு....!
சின்னச்சின்ன நினைவோசைகளால்-அவனுள்ளம்
சிலிர்த்துக்கொள்ளும்...!
வானம் விட்டு இறங்கி வரப்போகும்..
வண்ணப்பூவின் நினைவுகளில். ...
எண்ணங்களில் நிரைத்திருப்பான். ..!
கைகள்ஆயுதம் ஏந்தியபோதும்...-மழலையின் முகம் மனதில் வந்துபோகும்....!
எண்ணத்தினில் கனவுகளை சிறைவைத்துக்கொண்டு....
எதிரிகளுக்கு பொரி வைத்துக்காத்திருப்பான்...!
என்னவென்று சொல்வது...,
எங்கள் உண்மை கதாநாயகர்களின்-
உள்ளப்போர்க்கள நினைவுகளை...!

எழுதியவர் : (3-Jul-20, 8:01 am)
சேர்த்தது : renu
பார்வை : 80

மேலே