தந்தையின் தவிப்பு
நீ நடந்த பாதைதனில்...
நிழலாய் மாறிட தோன்றுதடி...!
பிஞ்சு விரல்...
பிடித்து நடக்க..
அஞ்சு யுகம் ஆனபோதும். ...
கெஞ்சுதடி எந்தன் மனம்...!
தத்தித்தத்தி நடைபெறும்
அத்திப்பூ பைங்கிளியே. ...!
துடிக்குதடி என் நெஞ்சம்-நீ
தடிக்கி விழப்போகும். .-
நொடிப்பொழுதில்....!
ஆயிரம் படைவீரர்....
அணிவகுத்து நின்றாலும்...
அஞ்சாத என்று நெஞ்சம்-அலைபேசியில்....
உன் மழலை அழுகுரல் கேட்டதும்..
நொருங்கிப் போனதடி என் இதயம்....!
. ...