OPTIMSM IN CORONATIC DAYS
வானோட்டம் காரோட்டத்தில் மகிழ்ந்து
தேரோட்டங்களில் திளைத்திருந்தனர் மனிதர்கள் !
கொரோனா வந்து உயிரோட்டத்தை நிறுத்தப் போக
ஊரடங்கில் உள்ளடங்கிக் கிடக்குது மனித கூட்டம் !
சாளரத்தின் வழி தினமும் பார்க்கிறேன்
வீதியில் முகமூடி அணிந்து செல்பவர்களை
கண்ணோட்டத்தில் கவிதை சொன்னவள்
ஒருவேளை இவளோ ...இவளோ என்று
ஒருநாள் முகமூடி திறந்து சிரித்தாள்
ஒரு மூதாட்டி ........!!!!
காதலில் காத்திருப்பதும் சுகம்தான் ....
ஒரு நாள் அவளும் வருவாள் சிரிப்பாள்
என்று சொல்வது போலிருந்தது ....