காதல் வலி

சுடும் கோடை வெய்யல்
சுடும் பீச்சு மணல்
சுட்ட அவள் வார்த்தைகள்
சுட்டுவிட்டதே எனது நெஞ்சை
தனிமையும் சுடுதே இப்போது
கொஞ்சம் கடல்நீரில் கால்வைத்து
கவலைகள் மறந்து நெஞ்சைக்
குளிர்த்திட பார்க்கின்றேன் நான்
கடல் நீரை நோக்கி
தனியே இன்று போகும்நான்
நேற்றுவரை அவள் செய்த காதல்
நெஞ்சில் ஒரு பக்கம்
நேற்று அவள் கொட்டிய
சூடு வார்த்தைகள் நெஞ்சில்
ஆறா புண்ணாய் வறுத்த
மறக்கமுடியா அந்த வலியை
மறந்து வாழ்ந்திட பார்த்தல்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jul-20, 1:59 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 102

மேலே