மணல் நதி

-----------------------------
மணல் நதி 🔞
______________________

ஹலோவ்..
............

தெரியுதுடி. பேசு.
..............

ஹலோவ்.....

(செருமல் சப்தம்)

அதான் தெரியுதுன்னு சொல்றேன்ல.

இல்ல... இப்பவே ரொம்ப லேட் ஆயிடுச்சு.

ம்ம்ம்

என்ன பண்றே...

நானும் எம் பொண்டாட்டியும் அம்மணமா கட்டிலில் இருக்கோம்.
.................

என்னடி சத்தத்தை காணோம்.

இல்ல... நான் போறேன்.

நில்றி... பெரிய இவ... உனக்கு மூடா இருக்கா..

இல்ல... அப்போ இருந்துச்சி.

இப்பவும் இருக்கும். வா. இவளோட சேர்த்து உன்னையும் செய்யறேன்.

அக்கா என்ன நினைக்கும்?

அடி போடி மூதி. அப்படியே கமெண்ட் பண்ணிட்டே இரு. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் செஞ்சு விடறேன்.

எதிர்முனை எந்த நொடிப்புமின்றி முனக துவங்கியதும், சிங்காரவேலனும் துர்காவின் வயிற்றை திருப்பி வைத்து கொண்டான். அங்கேயே அவன் பரக்க பரக்க தேய்த்து உரசினான்.

அப்படித்தாண்டி அப்படித்தாண்டி பேசு...
நிறுத்தாம பேசு. ஆஹ்ஹ்.

ஆஹ்ஹ்ஹ்.

அப்படித்தாண்டி என்னுதை புடிச்சி உள்ள வுட்டுக்க. நொழையுதா... ஆஹ்ஹ்...

துர்க்காவின் இடுப்புக்கு கீழ் ஆவேசமாய் தேய்த்து அவளையும் நெருப்பாக்கி அவள் வயிற்றின் மீது உயிர்துளிகளை சிதறடித்து மொபைலை கட் செய்து சுருண்டான் சிங்காரம்.

துர்கா மூச்சளவும் சப்தமின்றி கண்கள் இமைக்காது இருந்தாள்.பின் தன்னை சுத்தம் செய்ய வேண்டிய நினைவும் இன்றி சுவரோரமாக சென்று புரண்டு திரும்பி படுத்து கொண்டாள்.

அவள் வயிறு முழுக்க கொழகொழத்த அந்த திரவம் இறுகி சொற சொறவென காய்ந்து முடமானது.

🔷🔷🔷🔷🔷🔷

முடமாகியதும் தன்வந்திரீக்கு இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. கட்டிலில் படுத்தபடி விட்டத்தை வெறுமையாய் வெறிக்கவும் முடியவில்லை.

அப்போதுதான் அவருக்கு சிங்காரவேலன் நினைவுக்கு வந்தான்.

"மாமா எனக்கு வயசு தப்பிருச்சு. வேலை பொழப்பு இல்லாட்டியும் பெரிய அளவுக்கு ஆஸ்தி இருக்கு. இனி நான் கல்யாணம் முடிக்கிறதா இருந்தா அனாதரவா இருக்கிற நிற்கதியா இருக்கிற ஒரு பொண்ணைத்தான் கெட்டுவேன்".

போடா... அல்லாம் நல்லா நடக்கும். சலம்பிட்டு தெரியாதே என்றார் தன்வந்திரீ. அப்போது அவர் பாஸ்போர்ட் அப்ளை செய்ய கிளம்பி கொண்டிருந்தார்.
சிங்காரவேலன் அவரை நகருக்கு டவுன்பஸ்ஸில் ஏற்றிவிட்டு போனான்.

இந்த நினைவு தன்வந்திரீக்கு நெஞ்சுக்குழியில் அப்படியே இருந்தது.
அன்றைக்கு பாஸ்போர்ட் எடுத்துதான் என்ன ஆயிற்று? அவர் மகள் துர்க்காவின் வாழ்க்கை இப்படி முடியும் என்று யாருக்கு தெரியும்? அவர் மனம் அரற்றியது.
மகளே... துர்கா...

🔷🔷🔷🔷🔷🔷

துர்கா....

எஸ் மேம்...

க்ரேட் ஜாப். குட். என்று ஹெட்மிஸ்ட்ரஸ் சொன்னபோதும் துர்காவுக்கு நாம் இந்த இடத்தில் இருக்க பிறக்கவில்லை என்றே தோன்றியது. காட்டி கொள்ளவில்லை.

புன்னகைத்து சிரித்தாள்.

எல்லா குழந்தைகளுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. குட். இப்படித்தான் இருக்கணும் என்றார் மீண்டும்.

துர்கா வீட்டில் இருந்து மூன்று தெரு தாண்டி ஒரு குட்டி சந்தில் நுழைந்து திரும்பினால் அந்த ஸ்கூல் வந்துவிடும்.

அங்குதான் அவள் பாபா பிளாக்க்ஷீப் சொல்லி கொடுத்து பின் அபாகஸ் விளையாடி பின் மைதானத்தில் பந்து போட்டு விளையாடி.... அவள் டீச்சர்.

படித்தது பொறியியல்.

படிக்கும்போது தான் ஒரு என்ஜினீயர் என்று நினைத்து கொண்டாள். வெளியில் வந்து அலைமோதி அங்கிங்கே போனாலும் சொல்லி கொள்ளும்படி வேலை அமையவில்லை. வேலை கேட்டு கோவில் கோவிலாக சுற்றினாலும் கூடவே கல்யாணம் குறித்தும் வேண்டி கொண்டாள். எதுவோ ஒன்று ஆகட்டுமே.

படிக்கும்போதே ஒரு ஐயர் பையன் ப்ரொபோஸ் செய்தான். அவளுக்கும் பிடித்திருந்தது. கல்யாணத்துக்கு பின்னர் அசைவம் கூடாது மடிசார் மட்டுமே கட்ட வேண்டும் என்றான்.

அவளுக்கு அது என்னவோ போல் இருக்க மறுத்து விட்டாள். மறந்தும் விட்டாள்.

ஸ்கூல் குழந்தைகளின் கைகள் யதேச்சையாக திண்' னென்று இருந்த அவள் மார்புகளில் படும் பொழுதெல்லாம் அவன் நினைவு வந்துவிடும். அவன் படித்த உடனே யூ.எஸ் போய் விட்டான்.

ராத்திரியில் துர்கா அந்த பையனை நினைத்து பெருமூச்சுகளை விட்டு விட்டு இரண்டு மார்பும் ஏறி ஏறி இறங்குவதை பார்த்து கொண்டே இருப்பாள்.

தன்வந்திரீ அப்பாவாக தன் கடமைகளை துவக்கி விட்டார் என்பதை அறிந்தபோது துர்கா நிம்மதி கொண்டாள். பாத்ரூமில் அநேக நேரம் தன்னையே பார்த்து பார்த்து தொட்டும் தடவியும் ரசித்தாள். அவளுக்கு அப்போதும் காம்புகள் பெரிதாய் வடிவாய் பூக்கவில்லை.

பக்கத்து வீட்டு ரஞ்சிதாவுக்கு அவைகள் இரண்டும் தடியாய் நீளமாய் இருந்தது. அது எப்படி அப்படி ஆச்சு என்று கேட்கவும் வெட்கமாக இருந்தது.

ஒருநாள் கேட்டே விட்டாள். பேசாதைக்கி இரு. வர்றவன் பாத்துப்பான் என்றாள் ரஞ்சிதா. எனில் அவன் என்ன செய்வான்? நினைக்க நினைக்க மனம் கூத்தாடி குமுறியது துர்க்காவுக்கு.

எந்த ராஜகுமாரன் தன்னை சிறை எடுக்க போகிறான் என்று ஆவல் கூடி இருந்தாள்.

🔷🔷🔷🔷🔷🔷

என்னப்பா ராஜ்குமார், பொண்ணு பிடிச்சிருக்கா என்று அவன் அப்பா கேட்டார். ராஜ்குமாருக்கு துர்காவை பிடித்தது.

நாள் குறித்து... மண்டபம் பார்த்து....

'என்னை பிடிச்சிருக்கா துர்கா' என்று முதலிரவில் மீண்டும் கேட்டபோது 'எத்தனை தடவை கேப்பிங்க' என்றாள்.

அவன் அவளை அணைத்து கொண்டான்.

முதன் முதல் ஆணின் தொடல். அவளுக்குள் பஞ்சு மிட்டாய் திசுக்கள் மீது மொத்தி நடந்தது போல் இருந்தது. எக்கச்சக்கமாய் வெட்கம் வந்தது. ஆனால் ரஞ்சிதா முன்னாடியே இந்த காலத்தில் வெட்கத்துக்கு ஒரு மவுஸும் இல்லை என்று சொல்லி இருந்தாள்.

துர்காவின் உடைகளில் எங்கெங்கோ பின் குத்தி இருந்தாள். அவளே அதை ஒவ்வொரு பின்னாக பிளந்து உருவி போட்டாள். அவன் பார்த்து கொண்டே இருந்தான்.

துர்கா உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா?

இல்ல...

அப்ளை பண்ணிடு. நாம் சீக்கிரத்தில் ஆஸ்திரேலியா போக போறோம் என்றான்.

அவளுக்கு தலை சுற்றியது.

ஏன் ஏன் என்று அவள் நினைக்கும்போதே அவன் அவள் மீது கலைந்தான்.

ஆஸ்திரேலியாவா....

🔷🔷🔷🔷🔷🔷

ஆஸ்திரேலியாவா.... மாப்பிள்ளை இதை சொல்லவே இல்லையே என்றார் தன்வந்திரீ.

இதில் என்ன சொல்ல இருக்கிறது? அவன் வேலை அப்படி. நாளைக்கு ஜெர்மனி அப்பறம் பின்லேண்ட்... போக வேண்டியதுதானே என்று சம்பந்தி வீட்டில் கும்மாளமிட்டனர்.

தன்வந்திரீயும் "ஹி ஹீ ஹீ... ஆமாமா. அதுக்கென்ன" என்றார் உள்ளுர தவிப்பை அடக்கிக்கொண்டு.

ஒரே பெண். தாய் இல்லா பெண்.

தன்வந்திரீக்கு துக்கம் அடைத்தது.

துர்காவுக்கு அப்போது பெரிய துன்பமாய் எதுவும் தெரியவில்லை. ராஜ்குமார் அவளை கிறங்கடித்து கொண்டிருந்தான்.

அவன் தொட்ட இடமெல்லாம் வலிக்கவும் அந்த வலியே இனிக்கவும் செய்தது. அவள் பாத்ரூமில் குளிக்கும்போது அவன் செய்தது போலவே செய்து பார்த்தாள். ஒன்றும் ஆகவில்லை.

இரண்டு கொய்யா காய்களும் உர்ரென்று இருந்தது. ஆனால் அதையே அவன் தொட்டு தொட்டு இழுக்கும் போதும் கவ்வும் போதும் பட்டத்தின் வால் போல் துடித்தன. தொடைகளுக்கு இடையில் வெந்நீர் இறங்கும்போது ஹம்ம்ம் என்று நீளமாய் முனகல் அவளிடம் பிறந்தது.

ஆஸ்திரேலியா போக பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். தன்வந்திரீ அதை எடுக்க போகும்போதுதான் சிங்காரவேலன் அவரை பஸ்ஸில் ஏற்றி விட்டான்.

🔷🔷🔷🔷🔷🔷

சிங்காரவேலன் அதே ஊரில் தன் நாற்பத்தி ஒன்பது வயதில் வீட்டின் எச்சில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தான்.

அவனே சமைத்தும் ஹோட்டலில் வாங்கி கொண்டும் அதை அவனும் பின் அவன் அம்மாவும் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வீட்டை பெருக்கி ஒட்டடை அடித்து தோய்த்து வாராவாரம் அறைகள் கழுவி விட்டு ஓய்ந்த நேரத்தில் ஜோஹனாஸ் வெர்மீரின் போட்டோரியலிஸ்டிக் ஓவியங்கள் குறித்து படிப்பான். அல்லது வரைவான். பின் எழுதுவான்.

வேலன் அந்த குடும்பத்தில் ருத்ர பிறவியாக வந்து சேர்ந்தான். வெகு விரைவில் படிப்பை கை கழுவி விட்டு ஓவியக்கலையில் தன்னை நிறுத்தி கொள்ள ஆர்வம் கொண்டான்.

ஓவியம் மூலம் இந்தியாவில் புரட்சியை உருவாக்க முடியும் என்று அவன் நம்பினான். அந்த புரட்சி அப்படியே நடந்து முடிக்க மனிதன் தன்னை மீண்டும் ஒரு புதுப்பிறவியாக கண்டு கொள்வான் என்று நினைத்தான்.

ஓவியத்தில் இருக்கும் குறியீடுகள் அதன் கணிதம் அதை சமன் செய்யும் தீர்க்கமான சூத்திரங்கள் அனைத்தும் மனித மனதில் ரசாயன மாற்றங்களை உருவாக்கி அவன் வாழ்க்கையையும் அவனுக்குள் புலப்படுத்தும் என்று தீர்மானித்தான்.

🔷🔷🔷🔷🔷🔷

இந்த தீர்மானங்களை இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்க முடியும் என்று மஞ்சரி வேலனிடம் சொன்னாள்.

எப்படி?

மஞ்சரி சில பொம்மைகள் காட்டினாள்.

என்ன இது?

சீன மன்னர் சின் ஸி ஹுவாங்குவின் கல்லறையில் வைக்கப்பட்ட டெரகோட்டா போர் வீரர்களின் மாதிரி வடிவம். இதுவும் மண்ணால் நான் செய்தேன். டெரகோட்டா கலை பொருள். வைத்து கொள் என்றாள்.

எதில் செய்தாய்?

களிமண்.

எல்லா களிமண்ணிலும் வருமா?

வரும். ஆனால், வில்லியனூரை பொறுத்தவரை சங்கராபரணி ஆற்றங்கரையில் நல்ல களிமண் உண்டு. இவைகளை நான் அதில் செய்தேன்.

என்ன செய்யும் இந்த பொம்மைகள்?

உன் ஓவியங்கள் என்ன செய்யுமோ அதையே இதுவும் செய்யும்.

விலை?

ஒன்றுக்கு அறுபது ரூபாய். ஆனால் உனக்கு இலவசம்.

ஏன்?

உன்னை பிடிக்கிறது எனக்கு.

ஏன் பிடிக்கிறது உனக்கு?

மஞ்சரி அவன் கையை இழுத்து ஒரு முத்தம் வைத்தாள். வரையும் கரம்...

வேலன் முத்தமிட்டான். செதுக்கும் கரம்...

இருவரும் இதழ்களில் முத்தமிட்டனர்.
"கலை ஓங்குக" என்றனர்

🔷🔷🔷🔷🔷🔷

கலை ஓங்கியதும் காமமும் ஓங்கியது.

வேலனின் மீதுதான் மஞ்சரி நிழலும் வெயிலுமாய் கிடந்தாள். அவனை அவள் குடித்து கொண்டே இருந்தாள். அந்த தாகம் ஒருபோதும் தீராமல் இருந்தது.

ஒருமுறை அவன் ஆண்குறியின் வித விதமான விரைப்புகளை குறித்து கொண்டு அதையே பின் அவனுக்கு டெரகோட்டாவில் சிற்பமாக்கி தந்தாள்.

இம்ப்ரெஷனிசத்தில் மஞ்சரியின் மார்புகளையும் எக்ஸ்பிரஷனிசத்தில் அவளின் யோனியையும் அவன் வரைந்தபோது அது மனதுக்குள் கடுத்து கொண்டிருந்த எல்லா காம கலைகளையும் ஒன்று திரட்டியது.

இரு நிர்வாணமும் கலையில் பூப்பெய்தி இறுதியில் புனிதமடைந்து உறங்கின.

மஞ்சரி...

ம்ம். என்ன?

நாம் கல்யாணம் செஞ்சுப்போமா?

எதுக்கு?

இதுக்கு என்று அவள் தொப்புள் உள்ளே ஒரு விரலை வைத்தான் வேலன்.

அப்போ புரட்சி?

என்ன புரட்சி...

மக்கள் புரட்சி...

மஞ்சு... வேலன் தன் மடியில் இருந்த அவளை ஒருக்களித்து சாய்த்து வைத்து ரவிக்கையின் வழியே ஒரு மார்பகத்தை வெளியில் வீழ்த்தி வாய் வைத்து சற்று நேரம் உறிஞ்சினான்.

போதும் விடு என்று அவள் அவனை விலக்கிய போது அதுவரை முழுதாக ஏழு நிமிடங்கள் கரைந்து இருந்தது.

இப்போ அடுத்தது காட்டு...

இல்ல. கேட்டதுக்கு பதில்... புரட்சி..?

அது ஒரு மயிரும் இங்கே நடக்காது மஞ்சு.
நீயே பாரு. எத்தனை ரேஷன் கடை, எத்தனை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி, எத்தனை இலவசம்... மனுஷனுக்கு இனி ரோஷம் வர வாய்ப்பே இல்லை.

அதுக்கு விட்டுட முடியுமா?

மஞ்சு, நான் அலுத்து போய்ட்டேன். மக்கள் நம்மளை மதிக்க மாட்டாங்க.

நீ அவங்களை புரிஞ்சு உணர்வை தூண்டனும்.

வேலன் அவள் புடவையை இன்னும் இழுத்து சரித்து அவள் அடிவயிற்றில் நாவால் மெல்ல கோடு இழுத்தான்.

மஞ்சரி அரைக்கண் போட்டு மயங்கி அவன் தலையை அழுத்தினாள். வேலன் கால் அருகில் இருந்த புடவையை உயர்த்தி தூக்கியதும் வெள்ளை நிற கால்களை பார்த்து சூரியன் மேகத்தில் தன்னை மறைத்து கொண்டது.

🔷🔷🔷🔷🔷🔷

சூரியன் வருவதும் போவதுமான ஏதோ ஒரு நாளில்தான் ராஜ்குமார் துர்காவிடம் ஆஸ்திரேலியாவை வானளாவ புகழ்ந்து கொண்டிருந்தான்.

ஏங்க...

என்ன?

அவ்ளோதூரம் நாம போணுமா?

போணும். காசு வேணும். பணம். நம்ம பிள்ளைக்கு அங்கேதான் படிப்பு, வாழ்க்கை எல்லாம். இங்கே என்ன இருக்கு?

அம்மா அப்பா இருக்காங்களே.

இன்னும் பத்து வருஷம் இருப்பங்களா? நின்னு நிமுந்து எத்தனை தீவாளிக்கு எண்ணெய் தேச்சு குளிக்க முடியும் இவங்களாலே. போடி... லூசு... நாம இப்பவே பேசாம கழண்டுக்கலாம். அப்பறம்...

அப்பறம்?

துர்காவின் இடுப்பை ராஜ்குமார் நீவி விட்டான். அவள் நெளிய நெளிய ரவிக்கைக்குள் இருந்த மார்பில் அப்படியே முத்தமிட்டான்.

ஐய விடுங்க... சொல்லுங்க...

குருசாமி மாமாவை பார்த்தேன். உன் அப்பா அவர்கிட்டதானே மாந்தோப்பை குத்தகைக்கு விட்ருக்கார்?

ஆமா...

அதையும் அவர் இருக்கிற மச்சு வீட்டையும் நம்ம பேர்ல மாத்தி தரச்சொல்லு. நாம ஆஸ்திரேலியாவில் இருக்கச்சே ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா குருசாமியை எல்லாம் நம்ப முடியாது.

துர்காவுக்கு எல்லாம் புரிந்தது.

🔷🔷🔷🔷🔷🔷

மஞ்சரிக்கும் எல்லாம் புரிந்தது. வேலனிடம் இனி இருக்க போவது எல்லாம் காமம் மட்டுமே என்று அவள் தெரிந்து கொண்டாள்.

வேலனை விடுத்து அவள் எழுந்தபோது அவன் கையை பிடித்து இழுத்தான்.
அவள் அவனை உதறிவிட்டு நடந்தாள்.

பின் போயே போய் விட்டாள்.

நான்கு நாட்களுக்கு பின்னும் வேலன் தலையை எத்தனை முறை உதறி கொண்டாலும் அவனுக்கு விடாமல் தலை சுற்றி கொண்டே இருந்தது.

கண்களில் எரிச்சலும் மனதில் கோபமும் மிஞ்சியது. கண்களை சுருக்கி வைத்து சூரியனை பார்த்து மீண்டும் கீழே பார்த்தான். என்னென்னவோ உருவங்கள் தெரிந்தன.

வேலனுக்கு அப்போதுதான் புரிந்தது.

"தன் எல்லா சரிவுகளுக்கும் காரணம் இந்த சமூகம். சமூகம் மட்டுமே" என்றான்.

அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் இன்னொரு முறை சிரிப்பார்கள். இன்னொரு முறை அவமானம் செய்வார்கள். கொல்வார்கள்.

மனிதன் விழுந்து புரண்டு விழுந்து ஓடிக்கொண்டிருப்பது சக மனிதனுக்காக அல்ல என்பதை அவன் தெளிவாக அறிந்து கொண்டபோது முப்பத்தியெட்டு வயதை கடந்து சின்ன சொட்டை விழுந்த தலையுடன் இருந்தான்.

🔷🔷🔷🔷🔷🔷

உடலில் இருக்க வேண்டியது எல்லாம் நாட்றாம்பள்ளி மரிக்கொழுந்துவுக்கு இன்னும் அதிகமாக இருந்ததை வேலன் தெரிந்து கொண்ட இடம் காக்கிநாடா.

அவன் தோழனின் கிரகபிரவேசத்துக்கு போய்விட்டு பஸ் மாறி பஸ் மாறி வந்த போது கூடவே வந்த கொழுந்துவிடம் பேச்சு கொடுக்க அவளும் பேசினாள்.

ஊருக்கு வந்தும் போனில் விடிய விடிய பேசினார்கள். கொழுந்துவின் கணவன் சிமெண்ட் தொட்டி கடை போட்டு லாபம் வராது போகவே ஒரு மத்தியான நேரத்தில் ஆத்து பாலத்தின் கீழ் தூக்கில் தொங்கி போயே போய் விட்டான்.

பொழப்புக்கு சித்தாள் வேலை பார்க்க போய் அதுவும் சரியாய் வராது போனது. இப்போது சென்றாயன் மலை கோவிலுக்கு கீழ் பூக்கடை போட்டு அமர்ந்து விட்டாள்.

பொழப்பு போகுது ஒருமாதிரி என்றாள் கொழுந்து வேலனிடம். எப்படி என்று அவன் அதிகமாய் கேட்கவில்லை.

🔷🔷🔷🔷🔷🔷

எப்படி கேட்பது சொத்தை எழுதி தா என்று அப்பாவிடம்....

துர்கா துடித்து போனாள்.

ஆஸ்திரேலியா பயணம் கூட ஒரு நாடகமோ என்ற சந்தேகம் வரவும் அப்பாவிடம் ஓடினாள்.

தன்வந்திரீக்கு இனி என்ன நடக்கும் என்று தெரிந்தது. ராஜ்குமாரிடம் பேச போனார். கூடவே குருசாமியை கூட்டி கொண்டு போனது போன, வந்த எல்லா வம்பையும் வாங்கியது போல் ஆனது.

மாமியார் தினமணி எடுத்த எடுப்பில் தாம் தூம்மென்று குதித்தாள். "ரொம்ப பேசினா அத்து விட்ருவோம் பாத்துக்க கெழட்டு பயலே " என்ற வார்த்தையோடு எல்லா உறவும் அன்றே முடிவுக்கு வந்தது.

தன்வந்திரீ வீட்டில் வந்து விபூதி இட்டு கொண்டு "என்னெ பெத்த ஆத்தே. எம் மவ கெதியை பார்த்தியா" என்று வாய் விட்டு அலறினார். துர்கா தன் அப்பாவையே பார்த்து கொண்டிருந்தாள்.

தன்வந்திரீ அப்படியே கட்டிலில் படுத்து தூங்கியவர் விடிந்தபோதுதான் முழித்து கொண்டார். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. கையும் வாயும் கோணி கிடந்தது. அவருக்கு அது என்ன நோய் என்று நன்றாக தெரிந்தது.

கோணல் வாயோடு குருசாமியை பார்த்து திக்கி திக்கி சொன்னார். "இன்னைக்கி எம் மவ நிற்கதியா நிக்கிறாளே குருசாமி"... என்று அரற்றி அழுதார்.

🔷🔷🔷🔷🔷🔷

அழுவது எப்படி என்று துர்க்காவுக்கு தெரியவே தெரியாது. அவள் அம்மா போனதும் தெருவிலும் ஊரிலும் அவள் அப்பாவே தாயுமானவனாய் இருந்தார்.

தன்வந்திரீ நொடித்து நின்று பார்த்தது இல்லை ஊரும், இந்த துர்காவும். ஒரு முறை யானை பார்க்க வேண்டும் என்று சொல்ல மகளை தூக்கி கொண்டு கொல்லத்துக்கு போய் விட்டார் என்று ஊரில் இருப்போர் சிரிக்க துர்காவும் சிரித்தாள். அந்த அப்பாக்கு இப்படி என்றபோதுதான் அவளுக்கு வாழ்க்கை புரிந்தது.

ராஜ்குமார் அவள் மனதில் இருந்து புகைந்து மறைந்த போது அவள் அப்பா மட்டும் போதும் என்று முடிவு செய்தாள்.

தன்வந்திரீ அப்படி நினைக்கவில்லை.
குருசாமியை கூப்பிட்டு விட்டு சிங்காரவேலன் பற்றி சொன்னாள்.

நல்ல பயதான் ஆனா வயசு ஏறிடேசேப்பா.
பொண்ணுக்கும் அதுக்கும் பதினாறு கிட்டே வித்யாசமிருக்கே. இப்போ காலம் மாறிபோச்சில்லா. எப்படி கெட்டறது என்றார்.

கொஞ்ச வயசு ஆளு நம்ம பொண்ணை ரோட்ல நிப்பாட்டினதை மறந்து போனியலா நீரும் என்றார் தன்வந்திரீ.

இருந்தாலும்...

பேசி முடியும். இந்த கட்டை நெடு நாள் நிக்காது குருசாமி...

குருசாமி வாயில் துண்டை அழுத்திக்கொண்டு வெளியேறினார்.

🔷🔷🔷🔷🔷🔷

வாழ்க்கை தனக்கு கலையை புகட்டிவிட்டு தன்னை வாழ்க்கையில் இருந்து வெளியேற்றிவிட்டது என்பதை வேலன் புரிந்து கொண்ட பின் எல்லா துயரத்தில் இருந்தும் மனதை இழுத்து வைத்து கொண்டான்.

அவன் உலகம் வேறாக இருந்தது.

எங்கு போர் என்றாலும் அழிவு என்றாலும் மனதுக்குள் கொண்டாடினான். யார் வீட்டில் மரணம் என்றாலும் ரசித்தான்.

குருசாமி வேலனை பார்த்து கல்யாணம் குறித்து கேட்டபோது 'இன்னிக்கு நிலைமைக்கு தன்வந்திரீ மாமாவுக்கு செய்ய வேண்டியது தன் கடமை' என்று ஒரு வரியில் சொல்லி முடிக்க...

சின்னதாய் அந்த வைபவம் முடிந்தது.

முதலிரவு.

துர்காவுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. பழைய ஸ்கூலில் இருந்து ஹெட் மிஸ்ட்ரஸ் வந்து கண் கலங்க வாழ்த்தி விட்டு நான் உனக்கு அம்மா என்றாள். துர்கா அப்போதும் ரோஜா போல் சிரித்தாள்.

ரஞ்சிதா போனது போகட்டும்டி. உள்ளூர் ஆளு. வயசாளி னு நினைக்காதே. ஆம்பிளக்கு வயசே இல்ல என்றாள்.

துர்கா வெட்கப்பட்டாள்.

துர்காவின் சினேகிதி ஒரு துண்டு போர்ன் படத்தை அனுப்பி வைத்தாள்.

துர்கா காமமுற்றாள்.

இரவு அறைக்குள் புகும் முன் வேலன் தன் போனை அணைத்தான்.

🔷🔷🔷🔷🔷🔷

அணைத்து கொண்ட வேலனின் முகத்தை துர்கா பார்த்தாள். அவன் முகத்தில் மித மிஞ்சிய குழந்தைத்தனம் இருந்தது. அவளாக ஒன்றும் அவனுடன் அப்போது பேசவில்லை.

வேலன் எதிரில் அமர்த்தினான்.

துர்கா....

ம்ம்ம்..

உன் போன் எங்கே?

கொடுத்தாள்.

எந்த சோஷியல் மீடியாவில் எல்லாம் இருக்கே?

நான் மொதலில் ஃபேஸ்புக்...அப்பறம்...

அந்த போனை அந்த கணமே சுவரில் ஓங்கி அடிக்க சுக்கல் சுக்கலாய் அறையெங்கும் தெறித்தது.

விதிர்த்தாள்.

மீசையை வருடி புன்னகைத்தான்.

நாளைக்கி பேசிக் போன் வாங்கியாறேன்.
ங்கொப்பனோட பேச அதுவே போதும்.

துர்கா உடல் நடுங்கியது.

நீ எனக்கு இப்ப செகண்ட் ஹாண்ட் தானே... மொத புருஷன் எப்படி எங்கே நக்கினான் உன்னோட பழைய மொத ராத்திரியில்?

அர்த்தம் புரிந்து அவனை நிமிர்ந்து பார்த்து மீண்டும் குனிந்தாள்.

நமக்கு வயசு வித்தியாசம் இல்ல னு கூட வச்சிப்போம். ங்கொப்பன் என் இருவத்தி எட்டு வயசில் உன்னை செய்யறதுக்கு இப்படி கல்யாணம் கெட்டி குடுப்பானா?

...........

மாட்டான். ஏன் தெரிமா? நான் நொள்ளை. படம் வரையரவன். கெனா கண்டுக்கிட்டு பினாத்திட்டு அலையற பய. ஒருக்கா ஊர் இதை சொல்லும்போது ங்கொப்பனும் அங்கே இருந்து சிரிச்சான் தெரியுமா...

............

நீ பேச மாட்டே... இப்போ எதுக்கு கெட்டினேன் தெரியுமா? நீ மெத்த படிச்சவ. இனி எனக்கு சமைச்சி போட்டு என் எச்சிய வழிச்சு துன்னு. அதெ நான் பாக்கோணும்.

..............

சட்டென்று கட்டில் மீது ஏறி நின்றான்.
வாய தொறடி....

துர்காவுக்கு புரியவில்லை. அவள் அது என்ன என்று புரிந்து கொள்ளும் முன்பே வேலன் நிகழ்த்தினான்.

சட்டென்று அவன் உறுப்பை அவள் வாயில் திணித்தபோது துர்கா திடுக்கிட்டு நிலை குலைந்து தவித்தாள்.

அது எங்கெங்கோ சுற்றி நாக்கில் உராய்ந்து மோதி மோதி துழாவியது.
அவன் கொத்தாய் தலைமுடியை பிடித்து அசைய விடாது தன் முழு ஆங்காரத்தை செலுத்திக்கொண்டே இருந்தான்.

மின்னல் அடித்ததுபோல் குபுக்கென்று பாய அவள் வாயை அகலமாய் திறக்க உமிழ் நீரோடு கலந்து அவள் நெஞ்சமெல்லாம் வடிந்து விழ அடுத்த கணமே வாந்தியும் எடுத்தாள்.

போ... துடைச்சிட்டு படு. அவ்ளோதான் நமக்கு பர்ஸ்ட் நைட்...

கீழே குதித்து வெளியில் போனான்.

எல்லா பூக்களும் அங்கே வாடி இருந்தன. மரிக்கொழுந்து தவிர....

🔷🔷🔷🔷🔷🔷

மரிக்கொழுந்து வேலன் வீட்டுக்கு வருவதை தவிர்த்து விட்டாள். அவள் முன்பெல்லாம் வாரத்துக்கு மூன்று முறையாவது வருவாள்.

வந்து அவன் நடமாட முடியாத அம்மாவுக்கு உதவுவது போல் ஊருக்கு காட்டிவிட்டு அவனோடு மாடியில் புழங்கி விட்டும் போவாள்.

துர்கா பெரிய இடம் என்று தெரிந்தபின் அது நின்று போனது. வேலனுக்கும் அது வசதியாக இருந்தது. தேவைப்பட்டால் சென்றாயன் கோவிலுக்கு போவது போல் இருவரும் கிராமினி தோப்பில் நுழைந்து கள் குடித்துவிட்டு மேய்ச்சலை முடித்து விட்டே வருவார்கள்.

துர்காவுக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது அதையும் அவள் கண்டு கொள்ளமல் இருந்து விட்டாள்.

இப்படியே காலம் போக ஒரு அதிகாலை நேரத்தில் தன்வந்திரீ காலமாகி போனார்.
குருசாமி எல்லா காரியமும் செய்ய வேலனை கூப்பிட அவன் முகத்திலும் மாரிலும் அடித்து அழுது கொண்டு அவருக்கு கொள்ளி வைத்தான்.

அந்த பொம்பளை புள்ளைக்கு அப்பாரு போன பின்னாடி நீதான்யா தொழுவம். அந்த கை விளக்கை பிடிச்சிட்டு கரை சேந்திரு. அது குல தெய்வம்யா என்றார்.

மாமா.... என்று குருசாமி காலை கட்டி கொண்டு அழுதான் சிங்காரவேலன்.

துர்கா அன்றும் அழவில்லை.

🔷🔷🔷🔷🔷🔷

அழுவதற்கு என்ன இருக்கிறது என்று அவள் நினைத்தபோது அவளும் கொஞ்சம் கொஞ்சமாக வேலனை போல் மாறி கொண்டே இருந்தாள்.

ஒருநாள் வேலன் எதற்கோ போச்சம்பள்ளி வரை செல்ல அவள் வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு அலமாரியை திறந்தபோது வேலன் கல்லூரி காலத்து டயரிகள் இருந்தது.

எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு நாட்டின் ஓவியம் மற்றும் ஓவியர்கள் குறித்தும் எழுதி இருந்தான்.
அந்த கலை குறித்தும் அது ஐரோப்பிய சமூகத்தில் எப்படி மாற்றங்களை உண்டாக்கி வைத்திருந்தது என்பதை குறித்தும் எழுதி இருந்தான்.

துர்கா படிக்க படிக்க அங்கே வேலன் என்னும் ஒரு நதி எப்படி காலப்போக்கில் சாக்கடை ஆகி இருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

மஞ்சரி, டெரகோட்டா, சமூகம், லட்சியம் என்றெல்லாம் அது விரிந்தது. துர்கா அவசர அவசரமாக எல்லா பக்கங்களும் புரட்டி புரட்டி படித்தாள்.

ஒன்று மட்டும் நன்கு தெரிந்தது.

வேலன் எல்லாவற்றையும் வாழ்வில் சகித்து கொண்டிருந்தானே தவிர ஒரு போதும் அவன் மனதால் கண்களால் அழவில்லை. அவன் அழுதிருக்க வேண்டும். உடைந்து புலம்பி அழுதிருக்க வேண்டும்.

துர்க்காவுக்கு இப்போது நெஞ்சை அடைத்தது. அப்பா....என்று குரலெடுத்து கதறினாள். கண்கள் உடைந்தது.

அவளுக்கு வேண்டி அவள் அழுதாள்.
அது வேலனுக்கும் சேர்த்துதான்.

🔷🔷🔷🔷🔷🔷

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Jul-20, 2:54 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : manal nathi
பார்வை : 105

மேலே