அம்புஜம் பாட்டி
நரைத்த புருவங்களும் ,மங்கிய பார்வையுடனும் ,வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் தலைமுடி எழுபதை கடந்திருக்கும் ஆம் அவர்தான் அம்புஜம் பாட்டி.சித்திரை மாதம் ,நன்கு கொளுத்தும் வெயில் .சூரியனோ தலைக்கு நேராக நின்று பார்க்கும் நேரம் அது .புளியும் நான்கு வரமிளகாயும் அதனுடன் கொஞ்சம் பருப்பும் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்தெடுத்த துவையலை தூக்கு வாளியில் வைத்து சோறு எடுத்துக்கொண்டு வேகாத வெயிலில் பூமியில் கால்வைத்து வைக்காததற் போல் வேக வேகமாக ஓடிக்கொண்டே நடந்தாள் அம்புஜம் பாட்டி . அடியே அம்புஜம் இந்த வெயில்ல வரியே என்று சொல்லிக்கொண்டே நெல் வயலில் கலையெடுத்து கொண்டிருந்த கணேசன் தாத்தா ஓடி வந்தார் மனைவியிடம் . அங்குள்ள களத்துமேட்டில் இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.அப்போது ற்றிங்...ற்றிங் ரென்ற ஒலியுடன் பாட்டியின் இடுப்பில் வைத்திருந்த செல் போன் சத்தமிட்டது .அமெரிக்காவில் படிக்கும் பேரன் விடுமுறைக்கு ஊருக்கு வருவதாக கூறினான் .முகத்தில் ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி தாத்தாவுக்கும் பாட்டிக்கும் .ஊர் முழுவதும் ஒரே தம்பட்டம்.பேரன் வரான் என்று. வகை வகையான இனிப்புகள் செய்ய ஆரம்பித்துவிட்டாள் பாட்டி .தென்னத்தோப்புக்குள்ளே நடுவில் அமைந்த பெரிய ஓட்டு வீட்டிற்கு முன் ஒரு கார் வந்து நின்றது .கார் சத்தத்தை கேட்ட பாட்டியும் தாத்தாவும் வீட்டிற்கு முன் வந்து நின்றனர் .காரிலிருந்து இறங்கிய வேணுவை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.இளம் ஆட்டுக்கறியை பஞ்சுபோல் சமைத்து ,அம்மியில் மிளகாய் அரைத்து ஐர மீனு குழம்பு வைத்து விருந்து பரிமாறினாள் அம்புஜம் பாட்டி.மாந்தோப்பு,தென்னத்தோப்பு ,மலைகளுக்கு நடுவே உள்ள ஏரி,நண்டுகள் விளையாடும் நெல் வயல் என அந்த கிராமத்தில் உள்ள எழில் பொங்கும் இயற்கை காட்சிகள் அனைத்தையும் சுற்றி காமித்தாள் வேணுவிற்கு .அம்புஜம் பாட்டிக்கு எண்பதாவது பிறந்த நாள் வருவது பற்றி வேணு அறிந்தான் .பாட்டி விரும்பும் பொருளை பரிசாக அளிக்க வேண்டும் என்று விரும்பினான் ."எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என் அப்பா குறிஞ்சி மலைக்காட்டிலிருந்து கொம்புத்தேன் கொண்டு வருவார் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் என் தந்தையின் இறப்புக்கு பிறகு ...."என பாட்டி கூறியது வேணுவின் ஞாபகத்திற்கு வந்தது.பாட்டி,தாத்தா அறியாவண்ணம் பக்கத்துக்கு வீட்டு பெருமாளுடன் குறிஞ்சி மலைக்காட்டிற்கு கொம்புத்தேன் எடுக்க சென்றான் வேணு. .வெகு நேரம் ஆகியும் வேணுவை காணாததால் அம்புஜம் பாட்டிக்கு பதட்டமானது .கண்ணுக்கு எட்டிய தொலைவில் பெருமாளின் அழுகுரல் சத்தம் .வேணுவை கட்டிலில் வைத்து நான்கு பேர் தூக்கி கொண்டு வேகமாக வந்தனர் .பாட்டிக்கு இருதயமே நின்றாற்போல் ஆயிற்று .வேணு என்னப்பா ஆயிற்று உனக்கு...என்று கூறியவாறே அழுது துடித்தாள்.
'தேன் எடுக்க போகும் வழியில் கருநாகம் கடிச்சிடுச்சி ஆத்தா "என்று பெருமாள் கூறினான் .மருத்துவனை உடனடியாக அழைத்தனர் .மருந்து கொடுத்த மருத்துவர் இரவு முழுவதும் உன் பேரனை தூங்காமல் பார்த்துக்கொள் விடிந்த பிறகு நான் வந்து பார்க்கிறேன் என்று கூறி சென்றார் .ஊரில் உள்ள இசை கலைஞர்களை அழைத்து பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்தாள்.நூற்றியொரு தண்ணீர் குடம் எடுத்து நாகதேவனுக்கு பூஜை செய்தாள் .பொழுது புலர்ந்தது வேணுவிற்கு உடல்நலம் சரியாயிற்று .மகிழ்ச்சியில் எழுந்த வேணு பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல தேடினான் பாட்டியை எங்கும் காணவில்லை .ஏரிக்கரையிலுருக்கும் நாகதேவன் கோயிலுக்கு அனைவரும் சென்றனர் .காற்றிலே மிதக்கும் அன்னப்பறவையின் இறகு போல உயிர் பிரிந்த நிலையில் அம்புஜத்தின் உடல் தூங்கி கொண்டிருந்தது .....