பாகம் 1 யார் உன்னை கொன்றது

தன் முகமுழுக்க தாடியும், சுற்றிலும் தூசிப்படிந்த அறையில் மிகவும் அழுக்கு பிடித்த உருவத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன்!
"உகோவ்"    "உகோவ்"   "உகோவ்"
I finally found it..... Found it  என பெரும் மகிழ்ச்சியில் கத்தி, தான் கண்டறிந்த முட்டை வடிவிலான கடிகாரம் போன்ற அமைப்பொன்றில் 20.10.2011 என்ற தினத்தை சொடுக்கி, 5:25 என்ற கணத்தையும் சொடுக்கினான்

திடீரென அவனுக்கருகில் ஒரு கருப்பு நிற குழி ஒன்று தோன்றி அவனை உள்ளிழுத்தது.

சூரியன் தான் உறங்க செல்லும் கணத்தில் வானில் இறுதியாய் தன் ஆதிக்கத்தை செலுத்த எண்ணி தன் நெருப்பு கதிர்களை பாய்ச்சிக்கோண்டிருக்க, நாம் முதலில் கண்ட அந்த முப்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் இப்போது வெறும் பதினைந்து வயதுடையவனாய் அந்த விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்தான்.

அவனது உடலென்னவோ! 
பதினைந்து வருடத்தை தான் காட்டுகிறது, மனமானது முப்பது வயதை கடந்து வந்தமையால் என்னவோ!!!

அதுவரை விளையாடிக்கொண்டிருந்த அவன் சுற்றி சுற்றி சற்று குழப்பமான மனநிலையோடு பார்த்திருக்க, டேய் ஒழுங்க விளையாடு டா..............
எவளை டா பார்த்திட்டு இருக்க? என எதிர்முனையில் இருந்த பேட்ஸ் மேன் அவனை திட்டிய அதே கணத்தில்,

பின்னாலிருந்து விஜய் என்ற குரல் ஒரு அழகான பெண்ணுடையது!

அதற்கென்றே காத்திருந்தவன் போல் பேட்டை கீழேயிட்டு அவளை நோக்கி ஓடிட.............!

அவளானவள் இவனை கண்டு என்னைய நல்லா பார்த்துப்பல!!!!! என்னோட அப்பா, அம்மா மாதிரி நாம பிரிஞ்சிட மாட்டோம் ல!!!!! டா

என ஏதோ பயமும் வெட்கமும் கலந்த பார்வையில் இவனைக்கண்டு I lov u என்று அவள் சொன்ன அடுத்த நொடி தரையிலே சரிந்தாள்........!

அவள் காதின் ஓரத்திலிருந்து மட்டும் இரத்தம் கசிந்தது.

இதை கண்டு அவனுக்கு எவ்வித பதற்றமும் இருந்ததாய் தெரியவில்லை!!!!!!!
இது நடந்தேறும் என ஏற்கனவே அறிந்திருந்தான்.....

இறந்து விழுந்த அவளைக்கண்டு சிறிதும் பதற்ற படாமல் வேறெங்கும் இரத்தம் கசிகிறதா என்று நோட்டமிட்டான்

ஒரு குண்டூசி குத்தினால் ஏற்படும் குழியை விட 10 ல் ஓர் மடங்கு சிறிய குழி அளவிலான ஒரு துளை ஏற்பட்டு ஒரு சொட்டு இரத்தம் கசிந்திருந்தது அவளது கழுத்திலிருந்து..........

அதை அவன் கவனிப்பதும், பிரியா மயங்கியதை கண்ட அவனது நண்பர்கள் அவனை நோக்கி ஓடிவருவதும் சரியாக  அமைய, திரும்பவும் முட்டை வடிவிலான அந்த கடிகாரம் போன்ற ஒன்றில் 19.10.2011 என நாளை அழுத்தி 7:25 என சொடுக்கினான்....

சொடுக்கியது, மீண்டும் அதே கருங்குழல் தோன்றி அவனை மட்டும் உள்ளிழுக்க........
அவனானவன்.

உண்மையில் நீங்கள் யாரென்று நீங்களே யோசித்து இருக்கிறீர்களா?

இந்த உடாலா நீங்கள்?
இல்லை உயிரா நீங்கள்?
உண்மையில் நாம் என்பது நமது எண்ண ஓட்டங்கள்!
நமது சிந்தனைகள் தான் நாம்,

தீடீரென உங்கள் நினைவுகள் உங்களுக்கு மறந்து விட்டதென்றால், உங்கள் உடலும் உருயிரும் அதில் இருக்கும்

ஆனால் உங்களில் இருந்து உங்களின் நீங்கள் காணமல் போவீர்கள்

அதே விதிதான் இக்கதையில் வரும் அந்த கடிகாரத்திற்கும்,

ஒலியாண்டை ஒரு நொடியில் கடக்கும் வேகத்தை நாம் எட்டினால் கால பயணம் சாத்தியம் என்கிறது நவீன இயற்பியல்

அதே முறையில் தான் அந்த கடிகாரமானது அதை பயன்படுத்துவரின் நினைவை ஒரு நொடியில் ஒரு ஒளியாண்டை கடக்கும் தொலைவில் சுழற்றுகிறது.

அந்த யாருமே இல்லாத வகுப்பில், யாருக்கோ காத்திருக்க, இன்னும் இரண்டு நாளில் இறக்க வேண்டிய அவள் வந்தாள்

அவளிடம் ஒரு கடிதத்தை நீட்ட சென்றவன், தீடீரென அதை பிரித்து அதில் எழுதி இருந்ததை தனது பேனாவினால் அந்த கடிதத்தின் கடைசி வரியில் இருந்த "என்னை பிடித்திருந்தால் நாளை நம்ம  School ground ku வா" என்பதை மாற்றி, என்னுடைய வீட்டுக்கு வா என்று எழுதி அவளிடம் கொடுத்தான்.

என்ன டா,இது  என புரியாமல் பிரியா அவனைப் பார்க்க, அவன் மீண்டும் தனது முட்டை வடிவிலான கடிகாரத்தில் 21.10.2011 என டைப் செய்து 5:15 என்ற கணத்தை அழுத்தினான்.

மீண்டும் அதே Cricket மைதானம்

10 நிமிடத்திற்கு முன்னதமாக வந்திருந்தான்.

வந்தவன், தனது பேட்டை கீழே போட்டு விட்டு தனது வீட்டிற்கு ஓடினான்

சரியாக 5:17க்கு அவனது வீட்டை அடைந்தவன், அவளுக்காக காத்திருந்தான்.

அவள் 5:23க்கு வந்திருந்தாள் அவனது வீட்டிற்கு...... வந்தவள் என்னைய நல்லா பார்த்துப்பல,......
என் அப்பா அம்மா மாதிரி நாம பிரிய மாட்டோமே என்று I love u என்று சொன்ன அடுத்த நோடி இறந்து விழுந்தாள்.

காதிலிருந்து இரத்தம் சொட்டியது..........

இது கண்டிப்பாக நடக்குமென்று அவன் அறிந்திருக்கவில்லை, ஆனால் நடக்கலாம் என யூகித்திருந்தான்.

இறந்த அவளின் வலது காதை பார்க்க, அதில் இரத்தம் சொட்ட வில்லை

போனமுறை போன்று இல்லாமல் இந்தமுறை இடது காதிலிருந்து........ ஆனால் கழுத்தில் அத்துளை வலது புறத்தில் ஏற்ப்பட்டிருந்தது

முந்தைய இறப்பிற்கும் இந்தமுறை அவள் இறந்தற்கும் இந்த ஒன்றே வேறுப்பட்டிருந்தது ஆனால் முன்பை போலவே தான் அவள் இறந்திருந்தாள்.

ஒரு கணம் இறந்த அவளை அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து 5 நிமிடம் கவனித்தவனுக்கு கிடைத்த ஒரே வேறுபாடு

( போன முறை அவள் இறந்ததுக்கும் இந்த முறை அவள் இறந்ததுக்கும்)

அவள் அவளது கை பேசியை இந்தமுறை இடது கையில் வைத்திருந்தாள்.

திரும்பவும் அதே முட்டை வடிவிலான கடிகாரத்தில் 21.10.2011 என அழுத்தி 5:15 என்ற கணத்தைசொடுக்கி.......
தனது பேட்டை கீழே போட்டுவிட்டு வீட்டிற்கு ஓடி வந்து அவளுக்காக காத்திக்க........ அவளும் வந்தாள்

வந்தவள் ஏதோ பயங்கலந்த வெட்கத்தோடு அவனிடம் பேச போக.....

விஜய் அவளது முகத்தை இரண்டு கைகளால் பிடித்து வலது புறம் திருப்பி வலது கழுத்தில் நண்ணிய துளை வந்த இடத்தையும் இடது புறம் திருப்பி துளை வந்த இடத்தையும் ஒரு சேர அழுத்த இரண்டு புறமும் இரத்த நரம்புகள் பிடிப்பட்டன.....!

விஜய் அழுத்தியது பிரியாவிற்கு வலித்திருக்க வேண்டும் அவனது கையிலிருந்து விடுபட்டு என்ன டா என்றவளை?

விஜய் ஏதோ வித்தியாசமானவனாய் அவளது கையிலிருந்து அவளது மொபைலை பறித்து கிழே எறிந்தான்.

இதனால் கோபமடைந்த பிரியா! டேய் இது எங்க அப்பா ஆசையாக வாங்கி கொடுத்தது டா! என்று அங்கு நொருங்கி கிடந்ததை கிழே குனிந்து தொடவும் முன்பு போல் இறந்து விழுந்தாள்.

வலது கையால் தொட்டதால் இடது புற நரம்பு வெடித்து வலது காதில் இரத்தம் கொட்டியது.

இதற்குமுன் மூன்று முறை அவன் முன்னாலே இதே முறையில் தான் அவள் இறந்திருந்தாள்

அப்போதெல்லாம் பதட்டபடாமல் இருந்தவனுக்கு இந்த முறையும் அவள் இறந்தது கோபத்தை அதிகரித்திருக்க வேண்டும்

அந்த மொபைலை ஓங்கி உதைத்தவன் மீண்டும் அந்த கருவியில் 21.10.2011 என்றும் 5:15 என அழுத்தினான்.

.
.
.
.
.


மீண்டும் அவன் அவள் வருகைக்காக காத்திருக்க, அவளும் வந்தாள்.

அவள் வந்ததும் சற்று மெல்லியதாக அவன் புன்னகைக்கவும் அவளும் பேச வாயெடுத்தாள் ஆனால் அவன் குறுக்கிட்டு

பிரியா, இந்த போன் செமயா இருக்கு என அவளது கையிலிருந்த படி அந்த போனை தொட்டான்

ஓஓஓஓஓஓஓஓஓஓ ஆமா வா என் பயங்கர மகிழ்ச்சியில்!!!!!!!!!!! எங்க அப்பா எனக்காக போன Birthdayku Gift பண்ணது.......! என அவனிடம் அவள் சொன்னாள்.

செம டி பிரியா! எங்க வைத்து Gift பண்ணாங்க?என்றான் விஜய்

நாகர்கோவில் Dinosaur Park la வைத்து தான் டா என்றாள்

இதைக்கேட்டதும் ஏதோவிதமான அவசரத்தில் 31.11.2010 என்று மட்டும் குறியிட்டு சரியான கணத்தை குறிப்பிடாமல் அந்த பொத்தானை அழுத்த அருகில் ஏற்பட்ட கருங்குழியில் அவனது எண்ண ஓட்டங்களான அவனது மனத்தை மட்டும் அது இழுத்தது.

இது நடந்தேறுவதும் அவள் இறந்து விழுவதும் ஒருசேர அமைந்தது

போன முறைகளில் அவன் காலத்தில் பயணம் செய்தது போல அல்லாமல் இந்த முறை அவன் நேரத்தை குறிப்பட வில்லை

அதனால் அந்த கருவியில் உள்ள Default settingயில் இருந்தது படி காலை ஏழு மணிக்கு அவனை கொண்டுவிட்டது.

காலை பெட்டில் இருந்து பதறி எழுந்தவன் அம்மா! அம்மா! டுடே Extra Class என்று கத்திய படி, குளிக்கவும் இல்லாமல் பல்லும் விளக்காமல் பள்ளி சீருடையை அணிந்து அந்த Nagercoil dinosaur பார்க்குக்கு தனது சைக்கிளில் மிதிக்க ஆரம்பித்தான்

அன்றைய முந்தின இரவு அவனது அப்பாவிற்கும் அம்மிவிற்கும் நைட் சிப்ட் வேலை என்பதால் அவர்கள் அசந்து தூங்கி இருந்தனர்.

அவன் அவசரப்பட்டு அவளிடம் நேரத்தை கேளாமல் இங்கு வந்தது அவனுக்கு அவனின் மீது கோபத்தை ஏற்படுத்தினாலும் அவன் பொறுமையாக அவளது வருகைக்காக காத்திருந்தான்.

சரியாக 9:15ku அவளது தந்தை வந்தார், அவள் 15 நிமிடம் தாமதித்து 9:30க்கு அங்கு தனது சைக்கிளில் வந்தாள்

வந்ததும் இரண்டு Dairymilkயை அவளிடம் கொடுத்து Happy birthday my dear என்று கட்டி அணைத்தார்.

பிரியா, ரொம்பவே கண்கலங்கிய படி Miss u pa!!!!!!! என்றாள்

அந்த சமயத்தில் தன் பாக்கேட்டில் இருந்து ஒரு உருண்டை வடிவிலான சாக்லேட்டை அவளிடம் விழுங்கும் படி கொடுத்தார்

அவள் கடித்து உண்ண சென்றிட, அவர் தடுத்து விழுங்கிட வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார்.
அவளும் வருடத்திற்கு ஒருமுறை தான் தன்னை சந்திக்க வரும் தந்தையின் அன்பு கட்டளைக்கு உட்பட்டு அதை விழுங்கினாள்.

இதை தூரமாக நின்று கவனித்திருந்தான் விஜய்

சிறிது நேரம் அவளிடம் பேசிய அவளின் தந்தை அந்த மொபைலை அவளிடம் கொடுத்து கிளம்பினார்.

என்ன நடந்தது என கவனித்த விஜய், அங்கிருந்து அவளது தந்தை சென்றதும் அவரை தொடர்ந்து அவரது வீட்டை அடைந்தான்.

வீட்டின்
உள்ளே சென்ற அவர் வெளியில் செல்லும் வரை காத்திருந்தான்.

சரியாக இரவு 20:18க்கு அவர் வெளியே செல்ல, அவன் அந்த வீட்டினுள் எவரும் கவனிக்காத படி அவன் சென்றான்.

அங்கே சென்றதும் அவனுக்கு  அந்த அறை ஒரு மினி Mobile workshop போன்றே தெரிந்தது.

சராசரி வீட்டிற்கு தேவையான எதுவும் அவ்விட்டில் இல்லாததை பெரிய ஆச்சரியத்தோடு கண்டு அடுத்த அறைக்கு சென்றவனின் கண்ணில் ஒன்று பட்டது.

பிரியாவின் தந்தை பிரியாவிற்கு கொடுத்த அந்த சாக்லேட்டின் முன்மாதிரியில் இன்னொன்று அந்த அறையின் ஓரத்தில் இருந்த Charger table il மேல் இருந்தது.

அதை சந்தேகத்தோடு அழுத்தி பார்க்க அதில் மிக நுண்ணிய மைக்ரோ சிப் ஒன்று இருந்தது.

அதைக்கண்டதும் பெருமூச்சி விட்டவன் அருகில் இருந்த அந்த மர பலகையின் மேல் அமர்ந்து அவளது இறப்பு நிகழ்வையும், அவள் இறந்த பின் தனது அடுத்த 15 வருட வாழ்க்கையையும் அசைப்போட்டப்படியே பயங்கர சத்தமாக சிரித்தான் விஜய்

அவளை எக்கணம் அவளது தந்தை கொன்றாருக்க முடியும் என கணித்து விட்டானோ என்னவோ!

அவனது எண்ண ஓட்டங்களில் அந்த சாக்லேட்டில் இருந்த மைக்ரோசிப் அவளது தொண்டை குழியில் மில்லி மைக்ரானே அளவுள்ள தனது ஊசி போன்ற கால்களால் பற்றி இருக்க வேண்டும்

என்றைக்கு அந்த மொபைலில் அதிக படியான Radiation ஏற்படுகிறதோ! அன்றைக்கு தான் அவள் இறந்திருக்கிறாள் என நினைத்தவன்.

இத்தனை தெளிவாக யோசித்து பிரியாவை கொன்றிருக்கிறான் எனில் அவனை உயிரோடு விட்டால் அடுத்தமுறையும் கொல்ல முயற்சிப்பான் என்ற படி தனது கடிகாரத்தில் 30.11.2010 என அழுத்தி இப்போது அவன் வீட்டிலிருந்த அதே நேரத்தை குறிப்பிட்டான்

சரியான அன்றைக்கு முந்தினம் இரவிற்கு கால மாற்றம் அவன் அடைந்திட, அவன் தனது வீட்டிலிருந்து பிரியாவின் தந்தையை கொன்றிட அவரது வீட்டிற்கு கிளம்பினான்.

அங்கே சென்றவன் கையில் கத்தியுடன் கதவினை தட்ட அவர் திறப்பதாய் இல்லை

அதனால் போனமுறை அவன் அவரது வீட்டிற்கு எவ்வாறு அந்த Air Vendilation வழியாக சென்றானோ அவ்வாறே இந்த முறையும் உள்ளே சென்று அவரை குத்தி கொன்றான்.

பிரியாவின் தந்தை சாகும் வரை காத்திருந்தவன் அவன் இறந்தது உறுதியானதும், தனது கடிகாரத்தால் 21.10.2011 என அழுத்தி 5:21 என்று குறியிடவும் கருஞ்சுழலால் அவனது நினைவுகள் அந்த கிரிக்கேட் மைதானத்திற்கு சென்றது.

அங்கே பிரியா வந்து தனது காதலை அவனிடம் சொன்னாள் ஆனால் அவள் இறக்கவில்லை..............

மிகவும் சந்தோசத்தில் உகூவ் என துள்ளி கத்தியவனை கண்டு அவனது நண்பர்களும் அவனது அவளும்!

காதலை அவள் ஒப்பு கொண்டதால் அவன் இத்தனை மகிழ்ச்சி என எண்ணி இருக்கிறார்கள்

ஆனால் உண்மையில் அவனது இத்தனை ஆரவாரத்திற்கு காரணம்

அவன் அவளை காப்பாற்றியது என்று எவருக்கும் தெரிந்திருக்க போவதில்லை

இது நடந்து பதினான்கு மணிநேரம் கழித்து அவனும்,அவனது அவளும் சாலையில் ஒன்றாக பள்ளி சென்றுக்கொண்டிருக்க,

அதிவேகமாக வந்த கார் அவர்களை மோதியது.

இரத்தவெள்ளத்தில் பிரியா, தன் காதலனின் முன்னால் இறந்திருந்தாள்.



எதற்காக பிரியாவை அவளது தந்தை கொல்ல எத்தனிக்கிறார்?

21.10.2011 அன்று அவள் இறக்க காரணம் என்ன?

இந்த முறை அவளை கொன்றது யார்?

இந்தமுறையும் அவளை விஜய் காப்பாற்றுவானா?




டிக் டிக் டிக்..............................தொடரும்

எழுதியவர் : நவீன் (6-Jul-20, 12:17 pm)
சேர்த்தது : நவின்
பார்வை : 202

மேலே