ஒரு சாண் தூரம்

சோறு திங்கவும் தோணல,
தின்னாலும் எரங்கல,
எல்லாம் உன்னால..
ஓர் எடத்துல ஒக்காறவும் முடில,
வேலையும் ஓடல,
எல்லாம் உன்னால..

எந்த நெறம் நீ இருப்பே
எப்புடி உன்ன நான் கூப்பிடுவே
எண்ணி எண்ணி மண்டைக்குள்ள
கற்பனையா ஊறுதையா..

நீ வர்றநாள் பாத்து பாத்து
நாள்காட்டி கிழிஞ்சிருச்சு
அடிவயிறு கணமாச்சு
மனசுக்குள்ள பயமாச்சு

ஒரு சாண் தூரத்துல
மனசு ரெண்டும் துடிசிருக்க
பாக்கதான் முடியலையே
பாவி மனசு ஏங்குதையா

அலுங்காம குலுங்காம
அம்மாவுக்கு வலிக்காம
கர்ப்பப்பை தாண்டி
கைக்குள்ள வந்துரைய்யா
கண்ணுக்குள்ள நெரஞ்சுரைய்யா

எழுதியவர் : துகள் (6-Jul-20, 12:54 am)
சேர்த்தது : துகள்
பார்வை : 2775

மேலே