தாய்க்கு ஒரு தாலாட்டு 1

🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜

*தாய்க்கு ஒரு தாலாட்டு*

படைப்பு *கவிதை ரசிகன்*

🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜

கருப்பாக இருந்தாலும்
கருப்பு வைரம் என்று
தாலாட்டி....

ஊனமாக இருந்தாலும்
நீ ஞானம் பெறுவாய் என்று
சீராட்டி...

அழகில்லை என்றாலும்
திருஸ்டி பெட்டு வைத்து
பாலூட்டி....

எப்படியிருந்தாலும்
அப்படியே!
ஏற்றுக்கொண்டு நேசிக்க
அம்மா!
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது.......?

*கவிதை ரசிகன்*


🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Jul-20, 8:28 am)
பார்வை : 122

மேலே