அம்மா கவிதை
என்னை பத்து திங்கள்
சுமந்த நிலம் நீ.
மூச்சு காற்றில் எனக்கு
சுவாசம் தந்தவள் நீ
தெளிந்த நீர் போல்
அன்பு கொண்டவள் நீ.
ஆகாயத்தின் அளவைவிட அதிக
நம்பிக்கை வைப்பவள் நீ.
நெருப்பாக இருந்து எனக்கு
வெளிச்சம் கொடுத்தவள் நீ.