முடியாத ஞாயிறு
ஞாயிறுக்கு ஏங்கிய காலம்
போய்
எல்லா நாட்களுமே
ஞாயிறுகளாய்!
தொடரும் ஞாயிறுகளால்
சட்டென பணிக்கு
ஓய்வை கொடுத்து விடுவார்களோ?
பணியை பற்றிய
கவலைகள்
கண்களை சுற்றி
கரு வளையம்
வைக்க!
இப்பொழுது பிணியை
பற்றிய பீதியை
கிளம்பும் அடுத்தடுத்த மரண செய்திகள்