புரட்சி தீ🔥
புரட்சி தீ🔥
புரட்சியாவது
தீயாவது
சமீபத்திய
நடந்த
புரட்சிகள்
அனைத்தையும்
பசு தோல் போர்த்திய
அரசியல்வாதி
அதிகார துஷ்பிரயோகம்
செய்து தன் இரக்கமற்ற
இரும்பு கரம் கொண்டு
அடக்கிவிட்டான்
தான் வாழ்ந்த மண்ணுக்காக
போராடியவர்களுக்கு
துப்பாக்கிச் குண்டுகளே பரிசு.
உரிமைக்காக போராடியவர்களுக்கு
தேச துரோகிகள் என்ற பட்டம் வேறு.
வாழ்வாதாரம் தொலைத்த அவர்கள்
வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு
தள்ளபட்டார்கள்.
அவர்களின் வயிற்று பசியே
தீயாக எரிய
புரட்சி தீ எப்படி எரியும்.
இந்த பூமியை மெல்ல, மெல்ல
கார்ப்பரேட்
முதலைகளுக்கு குள்ள நரி கூட்டம்
கூறு போட்டு விற்க
நாமெல்லாம் ஜனநாயக அடிமைகள்.
தமிழா!! சொல்ல நா கூசுகிறது
மனம் வேதனை அடைகிறது
தேர்தல் என்பது திருவிழா அல்ல
தேர்தல் என்பது நல்ல தலைவனை தேர்தெடுக்கப்பது.
காந்தி படம் போட்ட நோட்டுக்கும்
அரை பிளேட் பிரியாணிக்கும்
குவாட்டருக்கும் ஆசை பட்டு
நயவஞ்சகர்களுக்கு ஓட்டு போட்டால்
நாமெல்லாம் என்றுமே நடமாடும்
சுதந்திர கைதிகள் தான்.
- பாலு.