தாம்பத்தியத்தில் நஞ்சு

பாலில் நஞ்சு உடலின் தோலில் நஞ்சு
காற்றில் நஞ்சு உண்ணும் சோற்றில் நஞ்சு
பாசத்தில் நஞ்சு தேசமெல்லாம் நஞ்சு
சிந்தனையில் நஞ்சு படைக்கும் இலக்கியத்தில் நஞ்சு
செயலில் நஞ்சு விளையும் பயனில் நஞ்சு
ஈட்டுவதில் நஞ்சு பெறும் வளர்ச்சியில் நஞ்சு
ஈதலில் நஞ்சு கொள்வோர் யாவரும் நஞ்சு
பக்தியில் நஞ்சு பழகும் பக்குவத்தில் நஞ்சு
பார்வையில் நஞ்சு பார்க்கும் யாவுமே நஞ்சு
கூறுவதில் நஞ்சு கொள்ளும் விளக்கமெல்லாம் நஞ்சு
பயிரெல்லாம் நஞ்சு பிறக்கும் உயிரெல்லாம் நஞ்சு
தாம்பத்தியத்தில் நஞ்சு தலைமுறையே நஞ்சு
எண்ணத்தில் நஞ்சு எல்லாவற்றிலும் நஞ்சு
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Jul-20, 2:53 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 153

மேலே