பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
பல பல. வண்ணப் பட்டாம்பூச்சி
பட படவென சிறகடித்து
பறப்பது என்ன நீ பட்டாம்பூச்சி

குளு குளு மலர்களில் தாவுகின்றாய்
குதுகுகாலமாகவே மாறுகின்றாய்
குந்தி குந்தி மலர்களில் நீ
குதிப்பது என்ன பட்டாம்பூச்சி

சின்னச் சின்னச் சிறகுகளில்
சொல்லவொண்ணாத அதிசயங்கள்
செதுக்கி வைத்தவர் யாரோ நீ
சிந்தித்து சொல் அவர் பேரோ

உன்னைத் தொட்டுப் பார்க்கவா
உன் உடனே தோழி ஆகவா
உன்னை என் கைகளுக்குள்
உரிமையோடு சிறை வைக்கவா

மழலை பருவத்தில் நீ எனக்கு
மகா அதிசயம் பட்டாம்பூச்சி
மனிதகுலம் யாவுமே உன்னை
மறந்து போகுமா பட்டாம்பூச்சி

பூக்களை தேடி முத்தமிட்டு
பூரித்து போகும் உன் காதலின்
பாக்களை காதோடு பாடிடவா
பட்டாம்பூச்சியாகவே நான் மாறிடவா

என்னிதயக் கனவும் நீ நாளும்
எழில் பரப்பும் விடிவும் நீ
எட்டத்தில் பறக்கும் உன்னை
எட்டி நின்றே ரசிக்கின்றேன்

எழுதியவர் : Ranjeni (18-Jul-20, 11:47 pm)
Tanglish : pattaampoochi
பார்வை : 209

மேலே