நண்பன் வீட்டு கன்னுக்குட்டி

GOPIKA IS THE BOSS

நண்பன் வீட்டு
கன்றுக்குட்டிக்கு
நல்மதிப்பெண் பெற்றமைக்கு
நல்வாழ்த்துக்கள்

கல்வியை நீ கற்றிட
தொலைதூரம் சென்றாலும்
உன் நோக்கம் நேர்கோட்டில்
என உரைத்துச்சொன்னவளே
உனக்கு என் வந்தனம்

கற்றலும் கேட்டலும்
கருவிகள்தான் பெண்ணே
ஆகச்சிறந்த ஆசான்
அனுபவம்தான் கண்ணே

கடந்துவந்த பாதைகள்
உனக்கிட்ட ஓர் கோடு
இனி வரும் காலங்களில்
காண்பாய் நீ மலைமுகடு

உள்ளம் கொள்ளை கொள்ளும்
உயிர்கள் உலகில் உண்டு
உடனிருந்தும் விரும்பாத
நிகழ்வுகளும் மனதில் கண்டு
படைத்தவன் கரம் பற்றடி
அவனிருப்பான் உன்னுடன்
உணர்வுகளாய் உரிமைகளாய்

உன் வாழ்க்கைப்பாதையில்
உலாவரும் யாவையும்
இறைவன் வகுத்தவை
இனியும் வருபவை

உறவுகளில்
விட்டுவிலகுதல் எளிது
அது மீண்டும்
தொட்டுத்தொடர்வது கடினம்
விட்டுகொடுத்திடு பெண்ணே
விழுப்புண்கள் ஆனாலும்
விழுதுகளாய் உன் வேர் தாங்கும்
வாழ்க்கை முழுவதும்
வாழையடி வாழையாய்

புன்னகையும் மன்னிப்பும்
மடுவையும் மலையாக்கும்
மனதினில் பூ பூக்கும்
கற்றுகொள்ளடி பெண்னே
வாழ்க்கை உனக்கு
வசந்தமாகட்டும்
காலங்கள் உன்னில்
பொக்கிஷமாகட்டும்
வெற்றித்திருமகள்
என்றென்றும்
உன் வசமே ஆகட்டும்

அன்புடன் வாழ்த்தும்
கி.விஜயலக்ஷ்மி

எழுதியவர் : viji (21-Jul-20, 4:12 am)
சேர்த்தது : krishna viji
பார்வை : 121

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே