மணமகளின் தோழியாய் நீ 555

என்னுயிரே...ஒரு திருமணத்தில்
இன்னொரு திருமணம்...

நிச்சயம்
செய்வார்கள்
என்பார்கள்...

நான் மறுத்தேன்
நீ
உறுதி செய்தாய்...

மணமேடையில்
மணமகளின்
தோழியாய் நீ...

ஏன் என்
கண்களில் பட்டாய்...

உன் சந்தன மேனிக்கு
அரக்குகலர் புடவையில்...

புதுமலராய்
பூத்து சிரித்தாய்...

என் பார்வை
மட்டுமல்ல...

வந்தவர்கள் பார்வையெல்லாம்

உன்னையே மொய்த்தன...

சமபந்தியென்று உன்னிடம்
யார் சொன்னது...

என்னருகில் வந்து அமர்ந்து
புன்னகை பூத்தாய்...

பரிமாறிய இனிப்பை ரசித்து
சாப்பிட்டேன் உன்னருகில்...

உன் இனிப்பை என்
இலையில்
எடுத்து வைத்தாய்...

எனக்கு
பிடிக்குமென்றா நிலவே...

நம் முதல் சந்திப்பு
தித்திப்புடன் ஆரம்பமானது...

பரிமாறிய கூட்டுபொரியலை
நீயே எடுத்து கொண்டாய்...

என்னிடம் கேட்காமலே
கண்சிமிட்டி புன்னகையுடன்...

ஆண்டுகள் பல கடந்தும்
இன்றும் இனிக்குதடி...

நீ கொடுத்த இனிப்பு
இன்று நம் திருமணநாளிலும்.....எழுதியவர் : முதல் பூ பெ.மணி (23-Jul-20, 4:38 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 97

மேலே