வருவாயே நீ வருவாயோ

பசித்தவனின் பிணி
நீங்க நீ வருவாயோ!
உழைப்பனின் உள்ளம்
நிறைய நீ வருவாயோ!
நொடிந்தவர்களின் நோய்
தீர நீ வருவாயோ!
கடன் பட்டவர்களின் துயர்
துடைக்க நீ வருவாயோ!
இல்லாமையில் கல்லாமல்
வாடும் இளைஞர்களின்!
கண்ணீர் துடைக்க
நீ வருவாயோ !
உண்மையாக உழைக்கும்
மானுடர் நெஞ்சம் நிறைய
நீ வருவாயோ !
நித்தம் நீ சேரும் இடம் பல
இவர்களிடமும் சற்று
வந்து போ, இவர்களும்
கொஞ்சம் துயர் நீங்கி
சிரிக்கட்டும்.

எழுதியவர் : நிஜாம் (23-Jul-20, 4:10 pm)
பார்வை : 88

மேலே