உயிர் கொல்லி கொரோனா

உயிர் கொல்லி கொரோனா

உயிரின் விலை தெரியுமா
உயிரோடு உள்ளவர்களின் நிலை தெரியுமா

பசி யென்றால் என்ன தெரியுமா
பசியோடு இருப்பவரின் நிலை தெரியுமா

ஊசி போட்டு வாழ்பவரின் வலி தெரியுமா
தூசி தட்டி வாழ்பவரின் நிலை தெரியுமா

இப்படி எதுவுமே தெரியாமல்
மக்களைமட்டும் வாட்டி வதைக்க தெரியுமா

தெரியுமா தெரியுமா என்று கேட்க்கும் எனக்கு
உன்னால் பதில்தான் சொல்ல முடியுமா

பெயரை கேட்டேன் கொரோனா என்றாய்
பிறந்த ஊரை கேட்டேன் வூஹான் என்றாய்
வளர்ந்த நாட்டை கேட்டேன் சீனா என்றாய்

உனக்கு பிடித்ததை கேட்டாள்
உலக மக்கள் என்றாய்

பிறப்பையும் வளர்ப்பையும் தந்த
உன் தாய் நாட்டிற்கு

உன் பன்பையும் பாசத்தையும் காட்டு
என் தேச மக்களிடம் காட்டாதே

உன்னையும் உன் தாய் நாட்டையும்
விடமாட்டோம் ஓடிவிடு உன் நாட்டிற்கு .

அன்புடன்
ராமன் மகேந்திரன்

எழுதியவர் : ராமன் MAHENDIRAN (24-Jul-20, 3:43 pm)
சேர்த்தது : இரா மகேந்திரன்
பார்வை : 39

மேலே