மனிதா நீயும் இயற்கையும்

மழைத்தரும் மேகம் ....
பருவம் கொஞ்சம் தப்பினாலும்
மனிதனின் வைதலையும் வசைமொழியையும்
மௌனமாய் வாங்கிக்கொள்ளும்
உன்னிடம் ஒன்றுமே எதிர்பார்க்கா மேகம்

நதிகள்.....
நதியின் நீரோட்டம் நம்பியே
நாகரீக சமுதாயம்
பிரதி உபகாரம் ஏதும் நினைக்கா நதிகள்

மரங்கள்....
கொடுக்க மட்டுமே தெரிந்தது
பூவாய் காயாய் கனியாய் ஒளஷதமாய்
ப்ராணவாயுவும் தந்து...
பிரதிஉபகாரம் ..... கேட்கவே அறியாததவை

பசு.....
பால் தரும் , தான் சுவைக்காத பால்
பால் தரும் வெண்ணையும் நெய்யும்
நீ தருவது ஒன்றுமே இல்லை
பால் தர இயலாதுபோக
நீ தருவது பாதுகாப்பு இல்லை
சொல்லவும் நா கூசுகிறது

இப்படி அன்பின் உயிர்நிலை இயற்கைக்கு
நீ தருவது
உன்னை அறிந்தும் அறியாமலும்
தீமை ஒன்றே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jul-20, 7:45 pm)
பார்வை : 120

மேலே