வர்ணஜாலம் 2

கவிதைமணி தந்த தலைப்பு
" வர்ணஜாலம் " 2
கவிதைமணி நன்றி
○○○
போயும் போயும் தீண்டக் கூடாத அவளையா காதலிக்கிறாய் எவ்
வகையில் தீண்டத்தகாதவளோ?
ஆமாம் தீண்டக்கூடாதவள் தான்

முகூர்த்த நாளை குறி வைத்து
வெற்றிலை பாக்கு வைத்து
சொந்தங்களை வரவழைத்து
கெட்டிமேளம் கொட்ட வைத்து
தாலி கட்டி மனைவியாக்காது
தீண்டக் கூடாதவள் தான் நீவீர்
சரியாக த்தான் சொல்கிறீர்கள்

வானவில்லின் வர்ணஜாலம்
வர்ணத்து பூச்சியில் வர்ணஜாலம்
உதயம் அஸ்தமத்தின் வர்ணஜாலம்
வானவேடிக்கையின் வர்ணஜாலம்
மனு குலத்தின் ஏற்றத்தாழ்வையும்
நிர்ணயம் செய்வதும் வர்ணஜாலமே

சகாய மேரி
வேளாங்கண்ணி
திருக்கை அரியலூர்
விழுப்புரம் மாவட்டம்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-Aug-20, 12:31 pm)
பார்வை : 26

மேலே