மழை மேகம்

கவிதைமணி தந்த தலைப்பு
" மழை மேகம் "
கவிதைமணி நன்றி
○○○

மழை மேகம் கண்ணில் பட்டாலே
பிழைக்க யோகம் பிறக்க போகிறது உழைக்கும் நோக்கம் முறுக் கேறும் அழைக்கும் கடவுள்களை வலிமறந்து தழைப்பில் தேக்கம் நுழையாதிருக்க

கிரகத்தில் ஒன்பது வகைகள் போலவே மேகத்தில் ஒன்பது வகைகள் உண்டாம்
பூப் பொன் மணி ப்பனி மண் நீர் மழைப் பொழிய மானிடத்து ஒன்பது துளையுள் ஒன்று பழுதாகு மேயானால் முடமாகும்

மேகத்திலும் ஒன்று செயலிழக்க நேரும்
வாயுமேகமதை வாகனப்புகை மூடிவிட பனியில்லை நீரில்லை மழையில்லை காலப்போக்கில் வாழ்வே யில்லை ஏன் உயிரே வாழவேறு வழிவகை இல்லை

என்றாகும் நிலைவந்து நிலைத்துவிடும்

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-Aug-20, 1:14 pm)
Tanglish : mazhai megam
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே