அறிவே சிவம்

சாலையில் நடந்து கொண்டு இருந்தேன். ஒரு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், ஒரு சிறிய விபத்தில் சிக்கி, 2'வீலரில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். யாரும் அவருக்கு உதவுவது போல் தெரியவில்லை. ஓடி போய், பார்த்தால், அந்த நபர் போதையில் உளறி கொண்டிருந்தார். "ஓ இது தான், யாரும் உதவாவதுக்கு காரணமோ" என எண்ணிக்கொண்டு, உதவாமல், நடையை கட்ட ஆரம்பித்தேன். திடீரென, வேறு ஒரு 2'வீலரில் இருந்து இறங்கிய ஒரு முதியவர், குடிபோதை நபருக்கு, எழ, உதவி செய்து, ஏதேனும் காயம் ஏற்பட்டதா? என கேட்டு அக்கறையுடன் கேட்டார். அவர் பேசியதில் இருந்து, அவர்கள் இருவரும் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லை எனபதை காண முடிந்தது . குடி போதை நபரின் முகவரியை, விசாரித்து, அவர் வண்டியிலே, அவரை, அவரது வீட்டுக்கு அழைத்துச்செல்ல ஆயத்தமானார் முதியவர். என்னிடம் வந்த முதியவர், "நான் திரும்பி வரும் வரை, எனது வண்டியை பார்த்து கொள்ள முடியுமா? தக்காளி கூடை இருக்கிறது, அதையும்" என்று கேட்டார். 'கண்டிப்பாக" என அனுப்பி வைத்தேன். அரை மணி நேரம் கழித்து வந்தார் முதியவர். வந்தவரிடம், "சார், கேக்றேன்னு
தப்பா நினைச்சுக்காதீங்க, அந்த ஆளே, போதை'ல விழுந்த்து கிடந்தான். அந்த மாதிரி ஆளுங்களுக்கு கண்டிப்பா, உதவி செய்யணுமா?" என கேட்டேன். அதற்கு அவர், "ஆமா, அவரு போதை'ல தான் கீழே விழுந்தார். தப்பு அவரது தான். அதனால, நாம அவருக்கு, உதவ கூடாதுன்னு சொல்ல முடியாது. அவருக்குனு, ஒரு குடும்பம் இருக்கலாம். 'இன்னும், இவர், வீட்டுக்கு வரலன்னு' பயப் படலாம். 'போதைல எங்க விழுந்து கிடைக்குறாரோ' என வறுத்தப் படலாம். அதனால, நாம அவங்க குடும்பத்தாருக்கு, கடமைப் பட்ருக்கோம்" என சொன்னார். பிறகு, "ஏதாச்சும் ஒரு காரணத்தை காட்டி, நாம இவங்களுக்கு, உதவி செய்யவோ அல்லது அக்கறை கட்டவோ தேவை இல்லன்னு சொல்றது இல்ல, ஒரு மனுஷனோட தன்மை. எந்த ஒரு சூழ்நிலையிலும், ஏதாச்சும் ஒரு காரணத்தை, கண்டுபிடிச்சு, நாம இவங்களுக்கு, உதவி செஞ்சே ஆகணும்னு முடிவெடுக்கிறது'தான், மனித குணம்" என ஒரு ஆதங்கத்தோடு , சிரித்துக்கொண்டே முடித்தார். அன்பே சிவம்!

எழுதியவர் : (6-Aug-20, 5:38 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
பார்வை : 100

மேலே