வாழ்க்கையில் சில நல்லவைகளைக் கண்டேன் கேட்டேன் சொன்னேன்

நான் சிறுவனாய் இருக்கையில் என்
தந்தையிடம் நான் கேட்டேன் ' அப்பா
நீங்கள் தேசத்து தந்தை மகாத்மா
காந்தியைப் பாத்ததுண்டா' என்று
அதற்கு அப்பா ' பார்த்திருக்கிறேன்
என்றார்.... நான்' அவர் இப்படித்தான்
இருந்தாரா' என்றேன் என் சரித்திர
புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைப்
பார்த்து கேட்டேன்.... அப்பா' ஆமாம்
அப்படியேதான் இருந்தார் ' என்றார்

பல வருடங்கள் கழிய ..... ஒரு நாள்
சிறுவனாய் இருந்த என் மகன்
என்னைக் கேட்டான் ' அப்பா இவர்
நடமாடும் தெய்வம் காஞ்சி சங்கராச்சார்யர்;
என்று என் புத்தகத்தில் இருக்கிறது
இவரை ' நீ பார்த்துகிறாயாபா ' என்றான்
' பலமுறைப் பார்த்திருக்கிறேன்
அவரிடம் வீபூதி பிரசாதம் கூட
வாங்கி இருக்கிறேன் என்றேன் ....
என் மகம் முகத்தில் ஒரு பிரகாச ரேகை
படர்ந்தது தெரிந்தது .....

' அப்பா அப்போ நீ நடமாடும் தெய்வத்தைப்
பார்த்திருக்க...
' ஏன் பா ராமர், கிருஷ்ணர், விநாயகர்,
ஆஞ்சநேயர் என்று பல சித்திரங்கள்
சிற்பங்கள் காண்கின்றோம்.... அவை
எல்லாம் கூட யாரோ பார்த்து
வழி வழியாய் வந்தவைதான்
பின் இவற்றை ஏன் மக்களில் சிலர்
ஏற்றுக்கொள்ளாது எள்ளி நகைக்கின்றார்
என்றான்....... அசந்துபோனேன் நான்
ஐம்பது வருடம் முன் வாழ்ந்தவரையே
இவர் வாழ்ந்தது உண்மையா என்று
பார்க்காதவன் கேட்கும்போது....
பல யுகங்களில் வாழ்ந்தவரை
இவர் அவரே என்று கண்டுகொள்ள
அந்த யுகத்தில் வாழ்ந்தவர் ஒருவர்
சித்திரமாய்/ அல்லது சிலையாய்
செய்துவைத்தால்தான் உண்டு....
அப்படி இருந்தும் அதற்கு சான்றிதழ் ஒன்று
வேண்டும் சரித்திர ஏடு என்ற பெயரில்!
இல்லை என்றால் அந்த கடவுளே வந்து
சொன்னாலும் 'இவர்கள்' ஏற்ப்பாரில்லை

போகட்டும் அந்த ; இவர்கள்;, ;நாத்தீக சிகாமணிகள்;

இவர்கள் இல்லை என்றால் அக்கடவுளர் இல்லை
என்றாவதில்லை ...
நம்பிக்கையில் வாழ்பவன் மனிதன்
நம்பினார்க்கு தெய்வம் வெறும் மரம் கல்லிலும்
காட்சிதரும் ..... என்றேன்

என் மகனும் அதை உணர்ந்தான்
நல்லபடி ஆஸ்தீகனாய் இருக்கிறான்
நான் மகிழும்படி....

' நீ பார்க்கததை ஒருவர் பார்த்திருக்க கூடும்
என்பதை நம்பு'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Aug-20, 5:18 pm)
பார்வை : 49

மேலே