வருத்தம்

என் உள்ளம் உயர்ந்து ஊக்கம் நிறைந்து உலகம் சிறக்கும் நாள் வருமோ? என் உள்ளம் எல்லாம் முள்ளாய் உருத்தும் கனவுகள் நிஜமாய் மலர்ந்திடுமோ? நான் பேசியக் கதைகள் கவிதைத் துளிகளாய் இருப்பினும் ஊமை மொழியாகின்றன. கேள்விகள் கேட்பார்கள் விடை தெரிந்தாலும்.. கற்றுக்கொடுப்பார்கள்.. பின் எதற்கு கேள்வி ? கண்ணீர் விட்டேன் காயப்பட்டப் போதெல்லாம்.. என் விரல்களில் மட்டுமல்ல விழிகளிலும் ஈரம் மட்டுமே மிச்சம். இனிமையை ரசிப்பேன் தனிமையில் இருந்தால்! ஆசைப்படுவேன் ஆனால் எதையும் விரும்பமாட்டேன்.. எதிர்ப்பார்ப்புக்கள் உண்டு ஏமாற்றம் வந்து விடுமோயென்னும் அச்சம்... அழகாய் பேசுவேன் என்னப் பயன் அநீதிக்கு குடை பிடிக்கும் ஊரை எதிர்க்கமுடியாமல்
போராடிக்கொண்டிருந்தேன் எனக்குள் நானே......... என் ஊமை விழிகளால்!!! இவ்வாறாக என் உணர்வுகளை எண்ணி எழுதிக் கொண்டிருக்கும் போது தாகம் ஏற்பட்டது... தேடினேன் தண்ணீர்க் குவளையை... திடீரெனக் கண்ணீராய் வடித்துக் கொண்டிருந்தது எனது வரிகளைப் படித்த என் எழுத்துக்கள்.. எதற்காக? வேதனை நிறைந்த வரிகளையென்னியா? இந்த வறியவளின் வர்ணனையென்னியா? சற்று யோசிக்கத்தான் தொடங்கினேன்..🤔

✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (7-Aug-20, 10:58 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : varuththam
பார்வை : 100

மேலே