புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 46---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௬

451. பிறர்மீது பழிசொல்லிச் செய்யும் அரசியல் நாடகம்
பொதுச் சேவைக்குச் செய்யும் பெரும் துரோகம்.

452. எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல்
எப்போதும் ஒரு செயலைச் செய்யாதே
அச்செயலால் தீமையும் நடக்கலாம்.

453. சோம்பல் என்பது முன்னேற்றத்தின் முற்றுப்புள்ளி
அதை உடைக்கும் முயற்சியே முன்னேற்றத்தின் தொடக்கப்புள்ளி.

454. உன் வாழ்விலோ? பிறர் வாழ்விலோ?
பணத்தை வைத்து விளையாடாதே
அது மரணத்தைக் கண்களில் காட்டிவிடும்.

455. வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என நினைக்கிறாயோ?
அதற்கான முயற்சியை அப்போதே தொடங்கிவிடு
அதுவே வெற்றிக்கான வழி.

456. பிறர்மீது உள்ள நம்பிக்கையை முதலாய் வைத்து எதையும் தொடங்காதே
காலச் சூழ்நிலையால் அது பாதியிலே நின்று விடக் கூடும்
உன் நம்பிக்கையே உனக்கான முதல்.

457. நம்பிக்கை என்ற ஒளி மறையும் போதே
சந்தேகம் என்ற இருள் சூழ்ந்து கொள்கின்றது.

458. நீ எதைச் செய்தாலும்
சிலர் ஆதாரித்துக் கொண்டே இருப்பார்
சிலர் வெறுத்துக் கொண்டே இருப்பார்
அவர்கள் உன் அருகில் இருப்பதால் உனக்கு ஒரு பயனுமில்லை.

459. உன் நிறை குறையைச் சொல்லும் உறவுகளை அருகிலேயே வைத்திரு
அவர்கள் வெறும் உறவுகள் அல்ல
உன் வாழ்வைச் செதுக்கும் உளிகள்.

460. ஏதோ? சில காரணங்களால்
உனக்கு நெருங்கியவர் மீது வெறுப்பு வரும் முன் விலகிவிடு
காலம் சில காயங்களை ஆற்றிவிடும்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (8-Aug-20, 11:39 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 356

மேலே