இவன் ஐஏ எஸ்

இவன் ஐ.ஏ.எஸ்
.
விடியலுக்கு முன்
எழ வேண்டும்
விடியல் சேவல்
கூவிய பின்
விழித்து பார்த்தும்
எங்கும் இருட்டுதான்
விடியவே இல்லையோ ?

நான்
காது கொடுத்து
கேட்பவன் மட்டும்
என் சொல்
பிறர் எழுதுவது மட்டும்
இவன்
பெரிய ஆள்
நீங்கள் நினைக்கலாம்
எனக்கு அதை பற்றி
கவலை இல்லை

தட்டி எழுப்பினாள் அம்மா
உனக்கு
விடிந்து விட்டது
வாயில் இனிப்பை
ஊட்டினாள்.

நிமிர்ந்து எழுந்தேன்
ஆம் விடிந்து விட்டது
ஆனாலும் எங்கும்
இருட்டு தான்
பரவாயில்லை !
இனி
இவன் ஐ.ஏ.எஸ்.
கோலை ஊன்றி
கம்பீரமாய் நடந்தேன்.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (8-Aug-20, 11:40 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 41

மேலே