பட்டினத்தார்

பட்டினத்தார்(நிலையாமை)
#####################

கண்ணிமைக்கும் நேரத்தில்
அதிகாலை
காலனவன் வீட்டுக்குள் வந்திருக்க

அஸ்திவாரம் ஆடியது

ஆசைப்பட்டு சேர்த்து வைத்த
ஆஸ்தி எல்லாம் கைமாறியது

இன்முக சிரிப்பு எல்லாம்
சொல்லாமல் போனது

ஈ எறும்பு கூட என்னை 
ஏளனமாய் பார்க்கிறது

உரிமை   இல்லாமல்  என் இல்லத்தில் மனம் ஓரமாய் நிற்கிறது

ஊர்வலமாய் நான் செல்ல ஒய்யாரமாய்  அமரர் ஊர்தி
வாசல் அருகே வருகிறது

என்னை எழுப்பி குளிப்பாட்ட
உறவுகள் சூழ்கிறது

ஏந்திய பிள்ளை  எனக்கு
எண்ணெய் வைக்க நிற்கிறது

ஐயோ! என மனம்
ஓலமிட்டு அழுகிறது

ஒவ்வொருவராய் முகம் பார்க்க 
வாருங்கள் 
என்று  கூக்குரல் கேட்கிறது

ஓங்கி முயற்சி செய்தும் எழ முடியாமல் என் உடல் கிடக்கிறது

ஔதசியம்(பால்)  எனக்கு ஊற்ற  உறவுகளின் அறைக்கூவல் வருகிறது
 
ஐயகோ! 
என்று மனம் பதைக்கிறது

கண் விழித்து நான் பார்த்தேன்
தீக்கனா என  உணர்ந்தேன்

பெற்றோர் உற்றோர் நிலையல்ல
பேரும் புகழும் நிலையல்ல இளமையும் செல்வமும் நிலையல்ல
ஆஸ்தியும் ஆயுளும் நிலையல்ல
வாழ்க்கையில் எதுவுமே நிலையல்ல
என்பதனை  நித்திரையில் தெளிந்தெழுந்தேன்

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
என்பதற்கு வார்த்தைகளாய் வடிவமைத்தேன்

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 5:08 pm)
பார்வை : 195

மேலே