தமிழ் வார்த்தை அறிந்துகொள்வோம் -- நற்பவி

நற்பவி என்றால் என்ன ?

ஒரு அற்புதமான தமிழ் வார்த்தை நற்பவி . இதன் பொருள்

நற் -- நல்லது

பவி -- பவிக்கட்டும் , உண்டாகட்டும் என்பது பொருள் . உலக மக்கள் யாவருக்கும் நல்லது உண்டாகட்டும் என்ற பொருளில் உருவாக்கப்பட்டது .

மஹரிஷி , சித்தர் காக புஜண்டர் அவர்களின் ஒரு பாடலில் நற்பவி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார் . புருவ மையத்துக்கு மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழிய பேரின்ப நிலையை அடைய நற்பவி பேருதவியாக இருக்கும் என மகரிஷி காக புஜண்டர் அருளுகின்றார் .

நற்பவி ! நற்பவி !! நற்பவி !!! என்று சொன்ன நொடியில் இருந்து உங்களின் மனத்தில் காகர் உள்ளே வருகிறார் , நல்ல சிந்தையை நல்ல எண்ணத்தை , நல்ல செயலை உதிக்க செய்கிறார் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (8-Aug-20, 9:11 pm)
பார்வை : 830

மேலே