மாற்று

ஏர் உழுதல்,
நாற்று விடுதல்,
நடவு நடுதல்,
களை பறித்தல்,
கதிர் அறுத்தல்
கதிர் அடித்தல்,
களம் சேர்த்தல்
என்றெந்த வேலையிலும்
வயற்காடெங்கும்
காணோம் மனிதர்களை !
அறிவியல் வளர்ச்சி
பார் ! எங்கும் எந்திரங்கள் !
பாரெங்கும் எந்திரங்கள் !
வயற்காடெங்கும் எந்திரங்கள் !
டிராக்டர்,
கல்டிவேட்டர்,
வீடர்,
ஹார்வெஸ்டர்,
இன்ன பிற எந்திரங்கள் !
மனிதர்களுக்கு மாற்றாக
எந்திரங்கள் இங்கு உண்டு;
மாற்று வேலைதான்
அவர்களுக்கு எங்கு உண்டு ?


-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (9-Aug-20, 8:40 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : maatru
பார்வை : 947

மேலே