எது நம் வழி
அரும்பெரும் சோதியாய்க்
கடவுளைக் கண்டவர்
ஆவுடையார்க்குப்
பூசை செய்திட
திருப்பெருந் துறையில்
கட்டினார் ஓர் ஆலயம்.
அருட்பெருஞ் சோதியாய்க்
கடவுளைக் கண்டவர்
மாந்தர்க்குப்
பசிப்பிணி ஆற்றிட
வடலூரில்
நாட்டினார் ஓர் தருமச்சாலை.
அருள் வேட்டல்
மணிவாசகர் வழி;
அருள் காட்டல்
வள்ளலார் வழி;
இவற்றுள் எது நம் வழி ?
- தீ..கோ.நாராயணசாமி