சிறுமை மறுப்போம்

"எங்களிறை பெரி(து)உங்கள் இறைதான் பொய்யே!
இணையற்ற(து) எங்கள்மதக் கொள்கை தானே!
செங்குருதிச் சிந்திடுவோம் மதத்துக் காகத்
தீராத சண்டையிட்டு மடிவோம்", என்றே
பொங்கிவரும் மடமையதன் பிடியில் சிக்கிப்
போர்க்கொடியைத் தூக்காமல் சிந்தி யுங்கள்!
இங்கெழுந்த மதப்பிணக்கால் மனிதம் தோற்க
இருள்வளர்க்கும் இச்சிறுமை தேவை தானா?

எழுதியவர் : இமயவரம்பன் (9-Aug-20, 9:37 pm)
பார்வை : 1397

மேலே