வாழ்க்கையின் ஒட்டம்

வாழ்க்கை என்னும் பள்ளியில் நான் இன்னும் மாணவியாகவே இருக்கிறேன்.. பள்ளியில் முதுகினைத்தட்டிக் கொடுத்துப் பாடம் கற்பித்தார்கள் ... வாழ்க்கைப் பள்ளியில் முகத்தில் அடித்துப் பாடம் கற்பிக்கிறார்கள்....முயற்சிச் செய்யாமல் புரிந்தது பள்ளிப்பாடம்....முயற்சிச் செய்தும் புரியவில்லை வாழ்க்கைப்பாடம்... இதில் ஆச்சர்யம் !!! என்னவென்றால் பள்ளியில் ஐந்து ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டது புரிந்துவிட்டது.... வாழ்க்கையில் ஐந்தாயிரம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டும் புரிந்துக் கொள்ள முடியவில்லை...வாழ்க்கையில் வந்த அனைவரும் சொல்லாமல் வந்தவர்கள், நிறையப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்... நான் மட்டும் கற்றுக் கொள்ள முயற்சித்தும் முடியாதவளாகக் கடைசியில் நிற்க்கின்றேன்..... வாழ்க்கை என்னும் பள்ளியில்.......

பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (9-Aug-20, 10:15 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
பார்வை : 197

மேலே