நான் இருக்கின்றேன்

போனதை நினைத்து வருந்தாதே ! குறைகளும் இல்லை, நிரைகளும் இல்லை நம்மிடையே... வேசங்கள் இல்லா, பாசங்கள் கொள்வோம். ஒரு நொடிக் கூட உன் நினைவில் நான் இல்லாமல் இல்லை என் நினைவில் நீ இல்லாமல் இல்லை. உளிக்கொண்டு அடித்தாலும் சிற்பம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை சிதைந்துப் போகாதிருப்போம். யார் நம்மை வெறுத்தாலும் நாம் நம்மை நேசிப்போம். கடினமான நேரத்தைக் கொடுத்து வாழ்க்கை வாழச் சொல்லி வற்புறுத்தினாலும் வாழ்ந்துவிடுவோம். நேசிக்கத் தெரியாதவரிடம் நாம் நேசத்தை எதிர்ப்பார்த்தது நம் தவறு. எந்தவொரு எதிர்ப்பார்ப்புமில்லாமல் நீ என்னிடம் சொல் ..... நான் உன்னிடம் சொல்கிறேன்..... " நான் இருக்கிறேன் உனக்கு " என்று..
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (9-Aug-20, 10:07 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : naan irukkinren
பார்வை : 286

மேலே