அழகிய நட்பு

என் அழகிய நட்பே! உன்னுடன் இனணந்தப் பிறகு தான் மலரும் பூக்களின் இசையிலிருந்து உதிரும் பூக்களின் மௌனம் வரை ரசிக்கக்கற்றுக்கொண்டேன்... நட்புக் கொள்ள தரம் தேவயில்லை... நல் மனம் போதும் என்பதை அறியக் கற்றுக்கொண்டேன்... நம்மை நேசிக்க யாருமில்லை என்றாலும் மற்றவரை நேசிக்கும் பண்பைக் கற்றுக்கொண்டேன்... நல்ல நட்பிற்க்கு நன்றி தேவையில்லை உண்மை போதும் என்ற உயர்வைக்கற்றுக்கொண்டேன்... இன்பத்தைக்காட்டிலும் துன்பத்தை பகிர்ந்துக்கொள்ளும் பகிர்வைக் கற்றுக்கொண்டேன்... நட்பென்றால் நாம் என்று என்னும் தறுவாயில் உன்னுடனான என் வாழ்க்கைப் பயணத்தை விடுத்து... வேறொருவருக்கு அன்பென்னும் பாடத்தைக் கற்பிக்கச் சென்றுவிட்டாய்.... நீ சென்ற இடத்தில் எல்லாவிதமானச் செல்வங்களைப்பெற்று நீ வாழ்வாய் என்பதை நான் அறிவேன்.... இன்று நீ ஒரு திசையில் நான் ஒரு திசையில் என்றாலும் உனக்காக காத்திருப்பேன்.... உனக்குத்தேவைப்படும் தருவாயில் தோள் கொடுக்கும் தோழியாக... என் தோளில் சாய்ந்துக்கொள் தோல்வியையும் நாம் தோற்கடித்துவிடலாம்...

என் உயிர் தோழிக்காக சில வரிகள்...

பாக்யா மணிவண்ணன்

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (9-Aug-20, 10:10 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : alakiya natpu
பார்வை : 587

மேலே