நல்ல நல்ல பிள்ளைகளை வளர்ப்பாய் தாயே
பாலூட்டி வளர்க்கும் தாய் அந்த
நிலவைக்காட்டி நிலாச்சோறு ஊட்டும் தாய்
பின் வளரும் அக்குழந்தைக்கு நல்ல
கல்வியறிவும் ஊட்டிட மிக்க பிரயத்தனம்
செய்கின்றாள் இவையெல்லாம் சிறப்பே ஆயின்
வளரும் குழந்தைக்கு அன்பெனும் அமுதையும்
ஊட்டி வளர்த்தால் கொஞ்சம் நினைத்து
பாருங்கள் நாட்டில் எத்தனை காந்தியரை
தாய் எனும் தெய்வம் உருவாக்கமுடியும்
அன்பும் பண்பும் கல்வியறிவும் வீரமும்
சேர்ந்தால் நல்ல நல்ல பிள்ளைகள்
உலகும் போற்றும் பிள்ளைகளாய் வளர்ந்து
எல்லோரையும் வாழவைக்கும் நற்செல்வங்களாய்த்
திகழ்வர் பெற்றோர் உற்றோர் மற்றோர் வாழ்த்த