ரோஜா

ரோஜா மகள்

உனக்காய் இது உனக்காய்
உன் சிரிப்பின் சிறு கணக்காய்
விழித்தாய் இமை விளித்தாய்
என் இதயம் வரித்தாய்


அன்றலர்ந்த மலரிதழே
ஆகா உன் புன்னகை
வீசும்காற்றே மோகம் கொள்ளும்
திருமேனி உன் வகை

ஒய்யாரமாய் மலர்கிறாய்
உயிர் ஓவியம் நீயடி
உன்னை நான் காத்திட
முள்ளாகிறேன் தானடி

சிறு இதழ் கொடிஇடை
சிலிர்க்கிறேன் நானடி
மந்தகாச புன்னகை
மயங்குகிறேன் பாரடி

உன்னைக்காணும் காலநேரம்
உள்ளம் கொள்ளை போகுதே
பட்டு இதழ் மேனி என்னை
பாடச்சொல்லி தூண்டுதே

உந்தன்வாசம் நுகர்கையில்
எந்தன்நேசம் பூக்குதே
தொட்டு இதழ் முத்தம் வைக்க
மோகம் என்னை கொல்லுதே

அள்ளி உன்னை அணைத்திட
முழுதாய் நான் தொலைகிறேன்
தொடர்ந்து சொல்ல ஆசைதான்
கடமை என்னை அழைக்குதே கண்மணி

எழுதியவர் : viji (12-Aug-20, 5:17 am)
Tanglish : roja
பார்வை : 282

மேலே